Bigg Boss Tamil 7: பிராவோ என்ன கீழ இருந்து மேல பார்க்குறான்.. இது பிக் பாஸா? இல்லை வேற எதாவதா?

சென்னை: பிரதீப் ஆண்டனி பாத்ரூமை திறந்து போட்டு அசிங்கம் பண்ணாரு என்றும் ரவீனா தாஹாவின் அண்ணாக்கயிறு பற்றி கமெண்ட் அடித்தார் என்றும் ஐஷுவை கட்டிப்பிடிப்பது போல கேவலமா சிக்னல் கொடுத்தாரு என அவரை கேரக்டர் அசாசினேஷன் செய்து மாயா, பூர்ணிமா, ஐஷு மற்றும் ஜோவிகா காதல் மன்னன் நிக்சன் உடன் இணைந்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், அதை விட மோசமாக புதிதாக வந்த ஆர்ஜே பிராவோ தன்னை கீழ இருந்து மேல பார்க்கிறான் என பிக் பாஸிடம் மாயா சொன்னதை வெளிப்படையாக அறிவிக்க மாயாவுக்கும் பிராவோவுக்கும் சண்டை வெடித்துள்ளது. கூடவே ஆம்பளையே இல்லை என ஜோவிகா தினேஷை பார்த்து சொன்ன வார்த்தையால் கடுப்பான அவரும் கோதாவில் குதித்துள்ளார்.

Bigg Boss Tamil 7 Maya again using woman card and blames RJ Bravo


நல்லா அடிச்சிக்கோங்க இப்பதான் பார்க்க இன்ட்ரஸ்டிங்கா இருக்கு என்றும் இந்த சீசனில் மாயா ஆரம்பத்தில் இருந்தே கூல் சுரேஷ் தப்பா பார்த்தாரு, பிரதீப் தப்பா பார்த்தாரு, இப்போ பிராவோ தப்பா பார்க்குறாருன்னு சொல்லியே ஒவ்வொருத்தராக காலி செய்து வருகிறாரா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

கீழ இருந்து மேல பார்க்குறான்: மாயாவை புதுசா அந்த ஆர்ஜே பிராவோ கீழ இருந்து மேல பார்க்குறான் என கீழ்த்தரமாக பேசி அடுத்து அவனையும் பெண்களுக்கு எதிரான போட்டியாளர் என வெளியே அனுப்பிவிட மாயா திட்டம் போட்டு விட்டாரா என்றும் மனசாட்சியே இல்லாமல் இப்படி ஆண் போட்டியாளர்களை உமன் கார்டு பயன்படுத்தி கமல் கொடுத்த சப்போர்ட்டை வைத்துக் கொண்டு மாயா செய்வது எல்லாம் ரொம்ப டூமச் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

எகிறிய தினேஷ்: ஏங்க உங்கள அவன் ஸ்கேன் பண்ற மாதிரி கீழ இருந்து மேல பார்த்தானா என கேட்டதும், கேரக்டர் அசாஸினேஷன் பண்ணாதீங்க என மாயா சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. நீங்க தாங்க அவனை காலி பண்ணியிருக்கீங்க என தினேஷ் எகிற விஜே பிராவோவும் மாயாவிடம் சண்டை போட ஆரம்பித்துள்ளார்.

வேற ஷோவா?: இது பிக் பாஸ் நிகழ்ச்சி தானா அல்லது வேற ஏதாவது ஷோவா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். பெண் போட்டியாளர்கள் இந்த சீசனில் இந்த ஒரு விஷயத்தை வைத்தே ஓட்ட முடிவு செய்து விட்டது ரொம்பவே மோசம் எல்லாம் கமல் கொடுத்த இடம் தான் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X