Bigg Boss Tamil 7: அங்க என்ன பாஸ் நடக்குது.. ஒரே பாத்ரூமுக்குள் ஒன்றாக சென்ற மாயா - ஐஷு.. கொடுமை!
சென்னை: கடந்த வாரம் பெண்களுக்கு பிக் பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என மாயா, ஐஷு, ஜோவிகா, ரவீனா தாஹா மற்றும் பூர்ணிமா ரவி உரிமைக் குரல் எழுப்ப பெண்களின் பாதுகாவலன் தோ வந்துட்டேன் என கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
ஓடாத பிக் பாஸ் நிகழ்ச்சியை அந்த ஒரு மேட்டரை வைத்தே ஒரு வாரமாக ஓட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மாயா ஐஷுவிடம் மைக்கை ஆஃப் செய்து விட்டு ரகசியமாக பேசியதும், அவரை அப்படியே பாத்ரூமுக்குள் கொண்டு சென்றதையும் பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது அங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாயா லெஸ்பியனா?: முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பாடகி சுசித்ரா மாயா ஒரு லெஸ்பியன் என்கிற பகீர் விஷயத்தை சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் ஐஷுவை தனியாக பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றதை பார்த்து ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.
பாத்ரூமில் ஐஷு - மாயா: ஏற்கனவே நிக்சன் மற்றும் ஐஷு இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்மோக்கிங் ஏரியாவில் பண்ண லீலைகளே ரசிகர்களை ஷாக் ஆக்கிய நிலையில், ஐஷுவின் பெற்றோர்கள் பிக் பாஸ் நடக்கும் ஸ்டூடியோவுக்கே சென்று தங்கள் மகளை வெளியிட சொன்னதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஐஷூ தங்கள் மகளே இல்லை இனி தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். ஃப்ரீஸ் டாஸ்க் வரை ஐஷுவை வைத்திருந்து உள்ளே பெற்றோரை அனுப்பி இன்னொரு டிராமாவை போடுவார்கள் என தெரிகிறது. இருவரும் மைக்கை ஆஃப் செய்து விட்டும், மைக்கை கழட்டி வைத்தும், பாத்ரூமுக்குள் ஒன்றாக சென்றும் ரகசியம் பேசுவது ரூல்ஸ் பிரேக் கிடையாதா? பிக் பாஸ் இதையெல்லாம் ஏன் தட்டிக் கேட்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கமல் கண்டுக்கமாட்டாரா?: பிரதீப் ஆண்டனியை கமல் வெளியே அனுப்பிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தவறுகளை பட்டியல் போட்டு அவரது ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். கமல் இதையெல்லாம் கண்டுக்கமாட்டாரா என்றும் இந்த வாரம் ஐஷூவை வெளியே அனுப்ப வேண்டும் அல்லது மாயாவை வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











