Bigg Boss Tamil 7: மாஸ்க் கேட்ட நிக்சன்.. அதுக்கு மாயா எதை எடுத்துக் காட்டினாரு தெரியுமா?.. ச்சே!
சென்னை: கூல் சுரேஷ் குறுகுறுவென தன்னை காமப் பார்வையுடன் பார்க்கிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மாயா நிக்சன் பிக் பாஸ் வீட்டை சுத்தம் செய்யும் போது, மாஸ்க் கேட்க உடனடியாக அந்த பொருளை எடுத்துக் காட்டி சிரித்த காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளன.
பிக் பாஸ் சீசன் 7 ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர ஆரம்பித்துள்ளது. அந்தளவுக்கு இந்த சீசனில் உள்ளே சென்றுள்ள இளம் போட்டியாளர்கள் முதல் வயதான போட்டியாளர்கள் வரை கன்டென்ட் கடலாக மாறியுள்ளனர்.

கூல் சுரேஷ் பயங்கரமாக யாருடனும் சண்டை போடாமல் செம அமைதியாக சேட்டைகளை செய்து வரும் நிலையில், விக்ரம் படத்தில் நடித்த மாயா தொடர்ந்து ஓவர் சீன் போட்டு வருகிறார் என புகார்கள் குவிந்து வருகின்றன.
ஏன் அப்படி பார்த்த: மாயா கூல் சுரேஷை தாண்டி போகும் போது அப்படியே அவரது பின்னழகை ரசிப்பது போல கூல் சுரேஷ் வெறித்து பார்க்க அதை பார்த்து விட்ட மாயா திரும்பி வந்து கூல் சுரேஷிடம் ஏன் அப்படி பார்க்குறீங்க, உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என கேட்டு வந்தார். அருகே இருந்த விஷ்ணு இதுதான் உள்ளே புகுந்து கோல் பட செம சான்ஸ் அப்போதான் ப்ரோமோவில் வருவோம் என நினைத்து மாயாவுக்கு எதிராக பேசி அவருடன் சண்டை போட்டது பெரிய சர்ச்சையானது.

கமல் சார் கேட்கல: கூல் சுரேஷ் - மாயா பிரச்சனையை கமல் சார் சனிக்கிழமை எபிசோடில் கேட்பார். முதலில் சேவ் ஆனது யார் என சொல்வார் என பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் பல்பு தான் கிடைத்தது. ஜோவிகா - விசித்ரா பஞ்சாயத்தையும், விசித்ரா - அனன்யா மேட்டரையும் லைட்டாக டீல் செய்து விட்டு பவா செல்லதுரைக்கு முட்டுக் கொடுக்க பாதி ஷோவையே காலி செய்து விட்டார்.
உள்ளாடையை எடுத்து நீட்டி: இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நிக்சன் தூசு மூக்கினுள் செல்லாமல் இருக்க மாஸ்க் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என கேட்க உடனடியாக தனது ஸ்போர்ட்ஸ் பிராவை எடுத்து மாயா நீட்டியபடி சிரிக்கும் காட்சிகளை ஷேர் செய்த ரசிகர்கள் இதுமட்டும் சரியா மாயா? என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











