Bigg Boss Tamil 7: பிக் பாஸுக்கு பக்காவாக ரெடியாகும் விஜய் டிவி பிரபலம்.. குளத்தில் என்னவொரு குளியல்

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் விரைவில் தொடங்கும் பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கூட்டத்தை சேகரிக்க அவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குளத்தில் வெள்ளை நிற கவுனை அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஜில்லாக்கி உள்ளது.

Bigg Boss Tamil 7 most expected contestant Jacquline latest photoshoot phots stuns fans

சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொண்டு கலக்கியது போல சீசன் 7ல் ஜாக்குலின் பங்கேற்றால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 7 முதல் ப்ரோமோ: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், ஆகஸ்ட் 18ம் தேதி இரவு 7 மணி 7 நிமிடத்திற்கு சரியாக பிக் பாஸ் சீசன் 7ன் முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.

Bigg Boss Tamil 7 most expected contestant Jacquline latest photoshoot phots stuns fans

அதில், கடல் அருகே சொகுசு காரை நிறுத்தி விட்டு சூரியனை பார்த்து ரசிக்கும் விதமாக கமல் I will Watching You என கண்களாலே சொன்ன ப்ரோமோ டிரெண்டாகி வரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மனங்களில் அதிகளவில் கிளம்பி இருக்கிறது.

ஜாக்குலின் வருகிறாரா?: விஜய் டிவியின் செல்லத் தொகுப்பாளினி ஜாக்குலின் இந்த சீசனில் போட்டியாளராக வரப் போவது உறுதி என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு ஏற்றார் போலவே தொடர்ந்து புதிய போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிகம் சேகரித்து வருகிறார்.

Bigg Boss Tamil 7 most expected contestant Jacquline latest photoshoot phots stuns fans

நெல்சன் படத்தில்: நயன்தாரா நடித்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர்ஸ்டாரின் தங்கையாக ஜாக்குலின் நடித்திருந்தார். ஆனால், அதன் பிறகு அதிகமாக சினிமாவில் அவர் தென்படவில்லை. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய மேடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளத்தில் நனைந்தபடி: வெள்ளை நிற கவுனை அணிந்துக் கொண்டு ஜாக்குலின் அழகு தேவதையாக அப்படியொரு போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் மட்டும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இளைஞர்களின் ஓட்டுக்களும் இவருக்குத்தான் என இவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X