Bigg Boss Tamil 7: 5 வைல்டு கார்டு மேல காண்டா? டைட்டில் அர்ச்சனாவுக்கு போயிடும்னு காண்டா நிக்சன்?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரிக்கள் மாஸ் காட்டி வரும் நிலையில், ஆரம்பத்தில் இருந்தே மாலா மாலா என ஐஷு பின்னாடி திரிந்து வந்த நிக்சன் கடுப்பாகி விட்டார்.

மிக்ஜாம் புயலில் பிக் பாஸ் வீடு எப்படி தப்பித்தது என ரசிகர்கள் வியந்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் நிக்சன் குரலை உயர்த்தி அதே பழைய மாடுலேஷனில் பேச ஆரம்பித்துள்ளார்.

Bigg Boss Tamil 7: Nixen upset over wild card contestants stealing credits

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் போட்டியாளர்களில் விசித்ரா மட்டுமே டைட்டிலுக்கு தகுதியானவர் என்றும் மற்றபடி வைல்டு கார்டாக உள்ளே வந்தவர்கள் தான் ரசிகர்களை கவர்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ரெட் கார்டு கொடுத்தவங்களுக்கு வேட்டு: பிரதீப் ஆண்டனிக்கு எதிராக ரெட் கார்டு தூக்கிய மாயாவின் புல்லி கேங் டீமுக்கு வரிசையாக பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் வேட்டு வைத்து வெளியே அனுப்பி வருகின்றனர். அக்‌ஷயா, ஐஷு, ஜோவிகா என வரிசையாக விக்கெட் விழுந்து வரும் நிலையில், அடுத்து விக்ரம், மணி, ரவீனா, பூர்ணிமா, நிக்சன் மற்றும் மாயாவை வெளியே அனுப்ப வேண்டும் என பிரதீப் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அர்ச்சனாவை பார்த்து காண்டு: வைல்டு கார்டாக உள்ளே நுழைந்த அர்ச்சனாவுக்கு விசித்ராவை விட ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு உள்ளது. மேலும், ரச்சிதாவின் கணவர் தினேஷுக்கும் ரசிகர்கள் அதிக ஓட்டுக்களை போட்டு வருவதை பார்த்து நிக்சனுக்கு செம காண்டாகி விட்டது என்கின்றனர். வைல்டு கார்டாக உள்ளே வந்து அர்ச்சனா எங்கே டைட்டிலை தட்டித் தூக்கிட போறாரு என்கிற பயத்தில் நிக்சன் தற்போது குரலை உயர்த்தி பேசுகிறார் எனக் கூறுகின்றனர்.

விசித்ராவுக்கும் பொறாமை: நிக்சனை விட விசித்ராவுக்குத் தான் அர்ச்சனா மீது அதிக பொறாமை என்றும் 5 வைல்டு கார்டு உள்ளே வந்ததும் அன்பாய் சந்தோஷமா இருந்த வீடு நிம்மதியை இழந்து விட்டது என நிக்சன் பேசியதும் விசித்ரா நிக்சனை கொண்டாடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சீசன் டைட்டில் வின்னர் இவர் தான் என ரசிகர்களே கெஸ் பண்ண முடியாமல் குழம்பித் தவிக்கின்றனர் என்பது தான் நிதர்சனமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X