நான் ஒரு முட்டாளுங்க.. பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி கமல் பிறந்தநாள் அதுவுமா போட்ட அப்படியொரு போஸ்ட்!

சென்னை: கமல்ஹாசன் பிறந்த நாளை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் தொடர்ந்து உலக நாயகனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
65 ஆண்டுகள் சினிமாவே மூச்சு என வாழ்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் சில போட்டியாளர்களை வெளியேற்றும் போது கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அந்த போட்டியாளர்களின் ரசிகர்கள் எல்லை மீறினாலும் சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் என்றுமே கமல்ஹாசனை தவறாக பேசியது இல்லை.

Bigg Boss Tamil 7: Pradeep Antony shares birthday wishes to Kamal Haasan with indirect knock?

எக்ஸ் போட்டியாளர்கள் ஆதங்கம்: இந்த முறை பிரதீப் ஆண்டனிக்கு கமல் கொடுத்த தீர்ப்பு தவறானது என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கவின், கவிஞர் சினேகன், நடிகர் ஆரி அர்ஜுனன், தொகுப்பாளி பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் மற்றும் நிவாஸினி என பல போட்டியாளர்கள் திடீரென பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

பிரதீப் ஆண்டனியும் கமல் கொடுத்த ரெட் கார்டை தனது வீட்டில் உள்ள பெண்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டு வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நான் ஒரு முட்டாளுங்க: இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திரபாபுவின் ”நான் ஒரு முட்டாளுங்க” பாடலை ஷேர் செய்து பிக் பாஸ் தொடர்பான அதிக சப்போர்ட் களையும், வெறுப்புகளையும் பார்த்துவிட்டேன். அவங்க சம்பாதித்து விட்டு போகட்டும், வாழவிடுங்க.. என்னை வச்சு மத்தவங்க கன்டன்ட் பண்றாங்க, எனக்கான கன்டென்ட் இனிமே நான் பண்ண போகிறேன் என பதிவிட்டுள்ளார்.

கமலுக்கு இப்படியொரு வாழ்த்து: மேலும், நான் உங்களோட பிக் ஃபேன் சார்.. சத்தியமா சொல்றேன்.. உங்களோட 69வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துக்கள்.. உங்கள் மீது அதீத மரியாதை உள்ளது சார் என பதிவிட்டுள்ளார். கடைசியாக #நல்லா இருங்க, #தீர விசாரிப்பதே மெய் என பதிவிட்டு கமல் தனக்கு கொடுத்தது தப்பான தீர்ப்பு என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும், அதில், யாராவது வேணும்னு செய்வாங்களா, ஆனால், நான் செய்வேன் என வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் பேசும் வசனத்தையும் குறிப்பிட்டுக் காட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X