Bigg Boss Tamil 7: விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்னு ஆசை.. பிரதீப் ஆண்டனி பேச்சு.. என்ன நடக்குது?

சென்னை: பிரதீப் ஆண்டனி சரியான மனநிலையில் தான் இருக்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் மற்றும் பேசும் விதம் என எல்லாமே வேறு விதமாக செல்வது ரசிகர்களை இரிடேட் செய்து வருகிறது.

அதிலும் அவர் வித்தியாசமாக சிரிப்பதை பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது. இந்நிலையில், விசித்ராவுடன் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என அவர் பேசியதும், அதற்கு விசித்ரா ரியாக்ட் செய்த விதமும் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

Bigg Boss Tamil 7: Pradeep Antony wants to share bed with Vichitra shocks fans

ஜோவிகா எஸ்கேப்: பெண்களின் மேக்கப்பை பிடுங்க வேண்டும் என பிரதீப் ஆண்டனி சைக்கோ தனமாக பண்ண வேலை ரசிகர்களை மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்களையே கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. அதிலும், வனிதா விஜயகுமார் பொண்ணு ஜோவிகா, அக்‌ஷயா, அனன்யா ராவ், ரவீனா தாஹா என பல இளம் பெண் போட்டியாளர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பிரதீப் இது தொடர்பாக அக்‌ஷயாவுடன் வாக்குவாதம் செய்வதை பார்த்து ஜோவிகா எஸ்கேப் ஆன சீன் தான் நேற்று இணையத்தில் டிரெண்டானது.

விசித்ராவுடன் ஒரே பெட்டில்: இந்நிலையில், கூல் சுரேஷை எல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பிரதீப் ஆண்டனி மாறி வருகிறார். லேட்டஸ்ட்டாக விசித்ராவுடன் ஒரே பெட்டில் ஒன்றாக படுக்க வேண்டும் என அவர் பேசிய காட்சிகள் சிரிப்பதா அழுவதா என்ன கொடுமை பிக் பாஸ் என புலம்புவதா என்றே புரியாத அளவுக்கு ரசிகர்களை குழப்பி எடுத்துள்ளது.

விசித்ரா என்ன சொன்னார்: என் கூட ஒரே பெட்ல படுக்கணுமா, உன்னால முடியுமா என பிரதீபிடம் அவரும் கேட்க, மீண்டும் தனது தெய்வீக சிரிப்பை சிரித்தபடி ஆமாம் என சொல்ல, அப்போ பிக் பாஸ் இது நடந்தே ஆக வேண்டும் என விசித்ராவும் பிரதீப் ஆண்டனி என்னுடன் பெட்டில் படுக்க வேண்டும் என பேசுவதெல்லாம் ஒரே கன்றாவியா இருக்கே என ரசிகர்கள் காதை பொத்திக் கொள்கின்றனர்.

ரசிகர்கள் கலாய்: பிரதீப் ஆண்டனி பனிஷ்மென்ட்டாக ஆணும் பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்க இப்படியொரு விசித்ரமான கான்வர்சேஷன் விசித்ராவுடன் நடைபெற்றது. இருவரும் ஒரே பெட்டில் படுத்தால் நிச்சயம் ஏகப்பட்ட ரகளை நடக்குமே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X