Bigg Boss Tamil 7 - நீ ஏன் பயப்படுற.. நிக்ஸனை லாவகமாக கவிழ்த்த பிரதீப் ஆண்டனி.. இந்த சீசன் வில்லங்கம் இவரோ?

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) நிக்ஸனுக்கு பிரதீப் ஆண்டனி அட்வைஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனின் வில்லங்கம் இவராகத்தான் இருப்பாரோ என்று கமெண்ட்ஸ் செய்ய ஆர்மபித்திருக்கின்றனர்.

பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் ஹாசன் தனது வீட்டிலிருந்து பிக்பாஸ் செட்டுக்கு காரில் சென்றார். சிகப்பு கலர் கோட் சூட்டில் படு கலக்கலாக கமல் ஹாசன் பிக்பாஸ் செட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

Bigg Boss Tamil 7: Pradeep Antonys advice to Nixon in Bigg Boss Tamil Season 7

இரண்டு வீடுகள்: அதாவது பிக்பாஸ் 7 தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அது எப்படி இரண்டு வீடுகளில் நடக்கும் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அதனை ரசிகர்களுக்கு விளக்கும் விதமாக பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னொரு கமல் ஹாசன் தோன்றி தொகுத்து வழங்கும் கமலிடம் இரண்டு வீடுகள் குறித்து பேசியபடி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

போட்டியாளர்கள்: பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி சென்றனர். கூல் சுரேஷ் உள்ளே நுழைந்ததும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் அடுத்த வருபவரை நீங்கள் கன்வின்ஸ் செய்தால் மட்டுமே இந்த கேப்டன் பதவி உங்களுக்கு என்று ஒரு கண்டிஷனையும் பிக்பாஸ் வைத்தார்.

கேப்டனுக்காக விளையாட்டு: அடுத்து உள்ளே வந்த பூர்ணிமா ரவி கன்வின்ஸ் ஆகாமல் கூல் சுரேஷிடமிருந்து கேப்டன் பதவியை வாங்கினார். அடுத்து உள்ளே வந்த ரவீனா தாஹாவும் பூர்ணிமா ரவியிடம் பேசி அந்த கேப்டன் பதவியை வாங்கிக்கொண்டார். அவரை அடுத்து வீட்டுக்குள் வந்த பிரதீப் ஆண்டனி ரவீனாவிடமிருந்து கேப்டன் பதவியை வாங்கினார். இதை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து சில நேரத்திலேயே இந்த பஞ்சாயத்தா என்று கேட்க ஆரம்பித்தனர்.

வென்ற பிரதீப் ஆண்டனி: அதனையடுத்து பாடகர் நிக்ஸன் வீட்டுக்குள் வந்தார். அங்கே வந்தவர் பிரதீப் ஆண்டனியிடம் கேப்டன் பதவியை கேட்டார். அதற்கு பிரதீப் எதற்காக உனக்கு கேப்டன் பதவி வேண்டும் என கேட்க; இது இருந்தால் முதல் வாரம் எவிக்‌ஷன் ஆகமாட்டேன் அதனால்தான் என்றார். பிரதீப் ஆண்டனியோ அதற்கு, "நீ ஏன் உள்ளே வரும்போதே தோத்து போயிடுவோம் என பயந்துட்டு வர. இப்படி எல்லாம் இருக்கக்கூடாது' என்று அட்வைஸ் செய்தார்.

அதற்கு நிக்ஸனோ இல்லை நான் பயப்படவில்லை எனக்கு வேண்டும் என்றார். அதற்கு பிரதீப் சரி நான் உனக்கு தருகிறேன் ஆனால் நீ பயந்துவிட்டாய் அதனால் தருகிறேன் என்று நினைத்துக்கொள்வேன் என்றார். உடனே நிக்ஸனோ இல்லை நான் பயப்படவில்லை. நீங்களே கேப்டன் பதவியை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

இந்தக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ஆண்டனி ரொம்ப விவரமான ஆளா இருக்காரு. இந்த வீட்டின் முதல் வில்லங்கத்துக்கான அறிகுறி அனைத்துமே அவரிடம் தெரிகிறது என்று ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X