Bigg Boss Tamil 7 - செம ஆட்டம் போட்டு உள்ளே சென்ற ரவீனா தாஹா.. ஜாலியான ஆள்தான் ஆனா என்ன நடக்கப்போகுதோ?
சென்னை: Bigg Boss 7 Raveena Daha (பிக்பாஸ் 7 ரவீனா தாஹா) பிக்பாஸ் சீசன் 7ல் மூன்றாவது போட்டியாளராக ரவீனா தாஹா வீட்டுக்குள் நுழைந்தார்.
பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கும் இந்த சீசன் களைகட்டப்போவதற்கான அத்தனை அறிகுறியும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. முதல் ஆளாக கூல் சுரேஷ் உள்ளே நுழைய இரண்டாவது ஆளாக பூர்ணிமா ரவி உள்ளே சென்றார். பிறகு சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா வந்தார்.

செம ஆட்டம்: முதல் இரண்டு போட்டியாளர்களும் சிம்ப்பிளாக உள்ளே நுழைய ரவீனா தாஹாவோ விருமன் படத்தின் பாடலுக்கு செம ஆட்டம் போட்டார். அவரது நடனம் பலரையும் கவர்ந்தது. பிறகு அவர் தொடர்பான வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய ரவீனா, " நான் ப்ளாங்காக வந்திருக்கிறேன். எனக்கு கோபம் வரும் ஆனால் அவ்வளவு சீக்கிரம் வராது.
19 வயதுதான்: எனக்கு 19 வயதுதான் ஆகிறது. செம ஜாலியான ஆள் நான். எல்லோரிடமும் ஈசியாக ஜெல் ஆகிவிடுவேன். எனக்கு சிரிப்பதற்கு ரொம்பவே பிடிக்கும். சிறு வயதிலிருந்தே எனக்கு நடிக்க ஆசை. ஆனால் சினிமா பேக்ரவுண்ட் எனக்கு இல்லை. நிறைய ஏமாந்திருக்கிறேன். இருந்தாலும் நான் இந்த ஃபீல்டை விடவில்லை. இந்த ஃபீல்டும் என்னை விடவில்லை.

குடும்பத்தை பார்த்துக்கொண்ட ரவீனா: சிறு வயதிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். அப்போதிருந்து என் குடும்பத்தை நானே பார்த்துக்கொள்கிறேன். முதன்முறையாக அம்மாவை பிரிந்து வந்திருக்கிறேன். எப்படி இருக்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனது அம்மாவை நான் மகாராணி பொல் வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

பிறகு வீட்டுக்குள் சென்ற ரவீனா தாஹா கூல் சுரேஷிடமும் பூர்ணிமாவிடமும் தன்னை அறிமுகம் செய்துகொண்டர். அதன் பிறகு பூர்ணிமாவிடம் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பதவியை எளிதாக அவர் விட்டுக்கொடுக்கவில்லை. இருந்தாலும் ரவீனா தாஹாவுக்கு ஆதரவாக கூல் சுரேஷ் பேச கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











