Bigg Boss Tamil 7: பிக் பாஸ் வீட்டில் அதிரடி சரவெடி கன்ஃபார்ம்... லிஸ்ட்டில் இணைந்த பிரபலங்கள்!
சென்னை: விஜய் டிவியின் டிஆர்பி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தான்.
இந்தாண்டுக்கான பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அப்பாஸ், கிரண், பப்லு உள்ளிட்ட மேலும் சிலர் பங்கேற்கும் நிலையில், இன்னொரு முக்கியமான நடிகை கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இந்த நடிகையா?: விஜய் டிவியின் ப்ரைம் நிகழ்ச்சியான பிக் பாஸ், இதுவரை 6 சீசன்களை கடந்துவிட்டது. கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6ல், சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வென்றார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தமுறையும் டிஸ்னி ப்ளஸ்ஸில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் நடைபெறவுள்ளது எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதனிடையே பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதேநேரம் இந்த சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, நடிகர்கள் அப்பாஸ், பப்லு, நடிகைகள் கெளசல்யா, கிரண், தர்ஷா குப்தா, விஜய் டிவி பிரபலங்கள் ரக்ஷன், குரேஷி, ஜாக்குலின், இவர்களுடன் ரேகா நாயர், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிகிறது. இவர்கள் தவிர மேலும் சில பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனை விடவும் இந்தமுறை வெயிட்டான போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் மேலும் இரண்டு பிரபலங்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என கலக்கி வரும் ரவீனா ரவி, பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஃபஹத் பாசிலுக்கு மனைவியாக நடித்திருந்தார் ரவீனா ரவி. அதேபோல், ஜவான் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் கொடுத்ததும் ரவீனா ரவி தான்.
அதேபோல், ரவீனா ரவி இல்லையென்றால், நடிகை ரவீனா தாஹா கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் டிவி நட்சத்திரமான ரவீனா தாஹா, மெளன ராகம் சீரியலில் நடித்து பிரபலமானார். மேலும் TTF வாசனுடன் பைக் ரெய்டு செய்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். ரவீனா ரவி அல்லது ரவீனா தாஹா இவர்களில் ஒருவர் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











