மூஞ்சப்பாரு! நாயே! சொருகிடுவேன்!.. இப்படியெல்லாம் பேசக்கூடாது நிக்சன்.. ஸ்ரீபிரியா அட்வைஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போ போட்டியாளர்கள் சண்டை போடுவார்கள் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். சண்டை நடந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சின்னு ஒன்னு இருக்குறதே வெளியே தெரிய வரும். இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லைன்னு சொல்லியிருந்தா உள்ளே இருக்குறவங்களே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை மோடுக்கு மாறியிருப்பர்.

ஆனால், இந்த வாரம் சுவாரஸ்யம் இருக்க வேண்டுமே என்கிற ரீதியில் நிக்சனுக்கு அர்ச்சனாவுக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்துள்ளது.

Bigg Boss Tamil 7: Sripriya condemned Nixen abusive talks on Archana

சண்டை போடலாம், ஆனால், வரம்பு மீறிய வார்த்தைகளை விட்டு விட்டால் கண்டனம் சொல்ல அனைவரும் வந்து விடுவார்கள். நிக்சனை வன்மையாக கண்டிக்காமல் நிக்சன் தம்பி இதெல்லாம் தப்புப்பா என ஸ்ரீபிரியா தற்போது ட்வீட் போட்டு அட்வைஸ் செய்துள்ளார்.

நிக்சன் அர்ச்சனா மோதல்: நிக்சனை எப்படியாவது இந்த வாரம் வெளியே அனுப்பிட வேண்டும் என பிளான் பண்ணி அவரை தூண்டிவிட்டு அர்ச்சனா குளிர் காய்கிறார் என அவருக்கு எதிராக நிக்சன் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நிக்சன் பேசியதை விடவா பிரதீப் ஆண்டனி தப்பா பேசிட்டாரு, அவருக்கு ரெட் கார்டு நிக்சனுக்கு நோ எலிமினேஷனா? நல்லா இருக்கு பிக் பாஸ் உங்க நியாயம் என பிரதீப் ரசிகர்களும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

வாய் சொல் வீரர்: ஆரம்பத்தில் இருந்தே நிக்சன் சரியான வாய் சொல் வீரர் என்றும் வாள் வீச மாட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர். எங்க ஏரியாவுல நான் எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா என பேசி விட்டு நாய் குலைத்ததும் பயந்து நடுங்கிய நிக்சன் வீடியோவை தற்போதும் ரசிகர்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஸ்ரீபிரியா அட்வைஸ்: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போதாவது கருத்து தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீபிரியா தற்போது நிக்சன் பேசியது தவறு என அட்வைஸ் செய்து ட்வீட் போட்டுள்ளார். ”நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா…” என ட்வீட் போட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X