விஜய் ஆண்டனி மகள் தற்கொலையை கன்டென்ட்டாக மாற்றுகிறதா பிக் பாஸ்? கிளம்பிய விவாதம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்டட் இல்லை என்று சொன்னாலும், செமி ஸ்கிரிப்ட் என்பது போலத்தான் இத்தனை சீசன்களும் நடந்து கொண்டிருக்கிறது. சரியாக வெள்ளிக்கிழமை மட்டுமே போட்டியாளர்கள் வெடித்து சிதறுவார்கள். அதன் பின்னர் அண்ணன் தம்பிகளாக, அம்மா பெண்ணாகவோ மாறி பிக்பாஸ் ரசிகர்களையே ஏமாற்றி விடுவார்கள்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. சரியாக வெள்ளிக்கிழமை ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்று, அது சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Bigg Boss Tamil 7 team took Vijay Antoy daughter suicide as content?

தனுஷ் முதல் விஜய் வரை: காடு இருந்தா புடுங்கிப்பானுங்க, காசு இருந்தா புடுங்கிப்பானுங்க, கிட்டே இருக்க கல்வியை மட்டும் தான் யாராலயும் எடுக்க முடியாது என்னை அசுரன் படத்தில் வந்த வசனம் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு தான் நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசாக வழங்கியிருந்தார்.

இன்னொரு பக்கம் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Bigg Boss Tamil 7 team took Vijay Antoy daughter suicide as content?

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலையை முதல் வார கன்டென்ட் ஆக எடுத்துள்ளனரா என்கிற கேள்வியை ஏகப்பட்ட ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். கமல்ஹாசன் இதற்கு ஒரு தீர்வு சொல்வதற்காகவே இந்த ஸ்கிரிப்ட்டட் ட்ராமா திடீரென விசித்ராக்கும் ஜோதிகாவுக்கும் இடையே நடைபெற்றது என்றும் கூறுகின்றனர்.

அடிப்படையான பள்ளிப்படிப்பு முக்கியம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என ஜோவிகாவே தெளிவாகக் கூறுகிறார். ஆனால் படிப்பு வராத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற அவரது வாதமும் இளம் தலைமுறையினரால் வெகுவாக வரவேற்கப்பட்டு வருகிறது.

ஸ்க்ரிப்டட் என விளாசல்: அதே நேரத்தில் விசித்ரா பேசிய அடிப்படை கல்வி அவசியமானது என்கிற பேச்சுக்கும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் விசித்ரா ஜோவிகா பத்தாவது கூட படிக்கவில்லை ஆனால் டார்கெட் செய்து அழுத்தம் கொடுப்பது தவறான விஷயம் என்றும் கமல்ஹாசன் ஜோவிகாவிற்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்குவார் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பள்ளிப்படிப்பு முதல் சைகாட்ரிஸ்ட் படிப்பு வரை படித்த விசித்ராவுக்கு அனன்யாவின் அந்தரங்க டாட்டூவை பார்க்கும் அளவுக்குத்தான் புத்தி இருக்கிறது என்றும் விளாசி வருகின்றனர். எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் ஆண்டனியின் மகள் விவகாரத்தை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி தேடக் கூடாது என்றும், மாணவர்களுக்கு தேவையான டாபிக் தான் இது என்றும் கருத்துக்களும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பல லட்சம் செலவழித்து பெரிய பெரிய பள்ளிக் கூடங்களில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்கும் நிலையில், படிப்பே வேண்டாம் என குழந்தைகள் பயந்து ஒதுங்கும் அளவுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தத்தை பள்ளிகள் தான் மாற்ற வேண்டும் என்பது தான் பலரது கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X