Bigg Boss Tamil 7 Eviction: இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா?.. டேஞ்சர் ஜோனில் இருக்கும் அந்த இருவர்!
சென்னை: Bigg Boss Tamil 7 Eviction - 5 போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே இறக்கியதில் இருந்தே டபுள் எவிக்ஷனாக பிக் பாஸ் வீடே களைகட்டி வருகிறது.
கடந்த வாரமும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிய நிலையில், அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார்.

நாளை பிக் பாஸ் ஷூட்டிங் நடைபெற உள்ள நிலையில், ஆன்லைன் கருத்துக் கணிப்பில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் போட்டியாளர் குறித்தும் அதில், அதிகம் வெளியேற வாய்ப்பு யாருக்கு இருக்கு என்பதையும் இங்கே பார்க்கலாம்.
அடம்பிடிக்கும் மாயா: திடீரென இந்த வாரம் கமல் என்ன பண்ணப் போகிறாரா என்கிற பயம் மாயாவுக்கு வந்த நிலையில், இப்பவே பிக் பாஸிடம் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என அடம் பிடித்து வருகிறார். புல்லி கேங்கை சேர்த்த 5 பேரையும் அப்படியே வெளியே அனுப்பிடுங்க பிக் பாஸ் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்த வார நாமினேஷன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், ஆர்ஜே பிராவோ, ஐஷு மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில், அர்ச்சனாவுக்கும் விசித்ராவுக்கும் பிரதீப் ரசிகர்கள் கொடுத்த சப்போர்ட் காரணமாக மிகப்பெரியளவில் ஆதரவு கிடைத்துள்ளது.
டேஞ்சர் ஜோன்: இந்நிலையில், இந்த வாரம் கடைசி இரண்டு இடங்களில் ஐஷூ மற்றும் பூர்ணிமா இருவரும் உள்ளனர். இந்த இருவரில் பூர்ணிமா ரவி தான் ரொம்பவே குறைவான வாக்குகளுடன் பிக் பாஸ் வீட்டில் உள்ளார்.
டபுள் எவிக்ஷன் இருக்குமா?: ஐஷூவை வெளியே அனுப்பி விட்டால் நிக்சன் தடவல் இருக்காது என்றும் தொடர்ந்து ஐஷூவின் பெற்றோர்களும் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் வைத்து இருவரையும் வெளியே அனுப்பிடுங்க கமல் சார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











