Bigg Boss Tamil 7 Elimination: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்னொரு மிக்சர் காலி.. யாரு?
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் புதிதாக 5 வைல்டு கார்ட் போட்டியாளர்களை களமிறக்கினாலும், ஏற்கனவே உள்ளே இருக்கும் காதல் ஜோடிகள் தான் கன்டென்ட் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரம் புது வரவு ஒன்று வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கே இன்று தான் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அப்படி உள்ளே இருந்து தகவலை கசிய விடும் கருப்பு ஆடு பிக் பாஸ் டீம் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எந்த பயனும் இல்லை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கே ஃபயர் விடலாமா வேண்டாமா? வேறு வழியே இல்லையே என தொடர்ந்து தீவிரமாக பிக் பாஸை பார்த்து வரும் கும்பலை தவிர வேறு யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிதாக கண்டுக்கொள்ளவே இல்லை. அடுத்த வீட்டு பெட்ரூமை எட்டிப் பார்க்கும் பழக்கம் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே என்பதால், மீண்டும் அந்த வேலையை பிக் பாஸ் இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில் அரங்கேற்றி வருவதாக கூறுகின்றனர்.
முதல்ல அண்ணா இப்போ அத்தான்: அண்ணன் தங்கச்சி உறவுமுறையை கொச்சைப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 படுமோசமாக சென்றுக் கொண்டிருப்பதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன. நிக்சனுக்கு ஆரம்பத்தில் ஃபயர் விட்டவர்கள் எல்லாம் தற்போது அவரை அடுத்த அசல் கோலாராகவே மாற்றி ட்ரோல் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஐஷுவுடன் அண்ணன் தங்கச்சியா பழகிட்டு இருந்தவரு திடீரென முத்தம், ஸ்மோக்கிங் ஏரியாவில் முனகல் சத்தம் என எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த வார எலிமினேஷன்: இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7ல் மாயா, ஐஷு, அர்ஜே பிராவோ, மணி, அக்ஷயா, அன்ன பாரதி, கானா பாலா, தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கினர். இதில், பலரும் புதிதாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள் தான். இதில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது அன்ன பாரதி தான் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











