Bigg Boss Tamil 7: இந்த வாரம் வனிதா மகள் பொட்டி படுக்கையை கட்ட வேண்டியது தான்..பிக் பாஸ் எவிக்‌ஷன்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 2ம் தேதி ஆரம்பித்து 2 மாதங்களை பூர்த்தி செய்யப் போகிறது. இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் குறைவான ஓட்டுக்களுடன் இருக்கும் போட்டியாளர் குறித்த அன் அஃபிஷியல் கருத்துக் கணிப்பு ரிசல்ட்டுகள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவிக்கு இந்த ஆண்டும் பெரிதாக கைகொடுக்கவில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Bigg Boss Tamil 7: This Week Jovika Vijayakumar expected to evict from the reality show

மேலும், பிரதீப் ஆண்டனியை வெளியேற்றி விஜய் டிவி மிகப்பெரிய வரலாற்று பிழை செய்து விட்டனர் என பிரதீப் ரசிகர்கள் அந்த ஷோவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

நாமினேஷனில் சிக்கிய நபர்கள்: இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அனன்யா ராவ், மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, விக்ரம் மற்றும் ஜோவிகா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக மீண்டும் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக ரீ என்ட்ரி கொடுத்த அனன்யாவையும் வந்த வேகத்தில் வெளியே தள்ள போட்டியாளர்கள் பார்த்துள்ளனர்.

விசித்ரா வின் பண்ணிடுவார் போல: பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா வெல்வாரா? அல்லது ஆரம்பத்தில் இருந்தே உள்ளே இருந்துக் கொண்டு விளையாடி வரும் விசித்ரா வெல்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விசித்ரா இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று முதலில் சேவ் ஆவார் என்றும் அவரை தொடர்ந்து தினேஷ் காப்பாற்றப்படுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரமும் பூர்ணிமா எஸ்கேப்: மேலும், அனன்யா, மணி, கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா சேஃப் ஜோனில் தான் உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரமே பூர்ணிமா எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அக்‌ஷயா, ஆர்ஜே பிராவோ வெளியேறியது வருத்தத்தை கொடுத்த நிலையில், இந்த வாரமும் பூர்ணிமா எவிக்ட் ஆக மாட்டார் என்றே தெரிகிறது.

ஜோவிகா அவுட்: விக்ரம் மற்றும் ஜோவிகா இருவரும் தான் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளனர். வனிதா விஜயகுமார் தொடர்ந்து தனது மகளுக்கு சப்போர்ட் செய்து வந்ததை அறிந்த ரசிகர்கள் யாருமே ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்ய நினைக்கவில்லை என்று தான் தெரிகிறது. இந்த வாரம் விக்ரமை விட குறைவான ஓட்டுக்களை பெற்றிருக்கும் ஜோவிகா தான் பொட்டியை கட்டுவார் என உறுதியாக தெரிகிறது. கடைசி நேர மேஜிக் ஏதாவது நடக்கிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X