Bigg Boss Tamil 7 Elimination: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை காலி பண்ணது இவர் தானாம்.. ரெட் கார்டா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்வுகள் நிகழ்ச்சி ஒரே சீரியல் நடிகர்களாக உள்ள நிலையில் பெரும்பாலான ரசிகர்களை கவரவில்லை. மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் அவர்கள் போடும் நாடகத்தனமான சண்டைகள் கொஞ்சம் கூட ரசிக்கும் படியாக இல்லை என்பதை பிக்பாஸே இந்த வாரம் சொல்லிக் கழுவி ஊற்றி உள்ளார்.

போரிங் ஷோவாக மாறியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென டிஆர்பி ஏற்றும் முயற்சியில் நடைபெற்ற சண்டை சற்றே பரபரப்பைக் கிளப்பின. கைகலப்பு சண்டையாக மாறிய நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு விஜய் வர்மா வெளியேறி உள்ளதாக உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய் வர்மா வெளியேற்றம்: நடனக் கலைஞராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கடைசி போட்டியாளரான விஜய் வர்மா முதல் வாரம் கேப்டனாகவும் கெத்து காட்டி இருந்தார். அசிம் போலவே சண்டை போட்டே டைட்டிலை வென்று விடலாம் என்கிற நினைப்புடன் பலருடன் முறைத்துக் கொண்டு, தன் மீது கை வைத்தால் வெளியே உள்ள ஆட்கள் வகுந்து விடுவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தி ஆரம்பத்திலேயே மஞ்சள் கார்டு வாங்கியிருந்தார்.
இந்த வாரம் பிரதீப் ஆண்டனியை தாக்கிய நிலையில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் விஜய் வர்மாவுக்கு எதிராக கொந்தளித்து வந்த நிலையில், குறைவான ஓட்டுகள் உடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் தற்போது லீக் ஆகியுள்ளன.
இதுவரை வெளியேறியவர்கள்: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மாயா, வினுஷா, விசித்ரா, பூர்ணிமா உள்ளிட்டவர்களில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் வர்மா வெளியேறி உள்ளார். இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை வெளியேறி நிலையில், அடுத்த விக்கெட்டாக விஜய் வர்மா மாறி உள்ளார். அடுத்த வாரம் வினுஷா அல்லது மாயா இருவரில் ஒருவரை வெளியே அனுப்புங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இந்த சீசன் டைட்டில் வின்னர் பிரதீப் ஆண்டனி தான் என்றும் இப்பவே ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











