பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா எங்கே ஹாலிடேவை என்ஜாய் பண்றாரு பாருங்க.. செம க்யூட் பிக்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா தனது ஹாலிடேவை ஜாலியாக கொண்டாடும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த அர்ச்சனாவின் ஆர்மியினர் ஹார்ட்டீன்களை போட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். சன் டிவியில் தொகுப்பாளினியாக தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கிய அர்ச்சனா நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7-ல் வைல்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்து டைட்டில் வின்னராக தேர்வாகி புதிய ரெக்கார்டை உருவாக்கினார்.

Bigg Boss Tamil 7 title winner Archana enjoys her holidays at Kodaikanal

சின்னத்திரை பிரபலம்: ராஜா ராணி சீசன் 2வை தொடர்ந்து தேன்மொழி பி.ஏ, முரட்டு சிங்கள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி என விஜய் டிவியில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா சீரியல் கேமியோ ரோலில் நடித்தார்.

பெரிய பரிசுத்தொகை: அதன் பின்னர் சினிமாவில் நடித்து வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து 50 லட்சம் ரூபாய் பணம், ஜி ஸ்கொயர் வழங்கிய ஒரு வீடு மற்றும் விடாரா கார் கம்பெனி வழங்கிய ஒரு கார் என பல பரிசுகளை முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற எந்த போட்டியாளர்களுக்கும் கிடைக்காத அளவுக்கு தட்டி தூக்கினார்.

கொடைக்கானலில் சுற்றுலா: பிக் பாஸ் வீட்டுக்குள் சுமார் இரண்டு மாதங்கள் அடைந்து கிடந்த அர்ச்சனா டைட்டிலை வென்ற நிலையில் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அதன் பின்னர் சில கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டவர் தற்போது கொடைக்கானலில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

காட்டுக்குள்ள அர்ச்சனா: பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து பெரும் போட்டியை எதிர்கொண்ட அர்ச்சனா பிக் பாஸை விட்டு வெளியே வந்த நிலையில் அதிகமான விமர்சனங்களை சந்தித்தார். பிஆர் வைத்து தான் டைட்டில் வென்றேன் என சொல்றாங்க, ஒரு கோடி ரூபாய் இருந்தால் சொந்தமா படம் எடுத்து நானே ஹீரோயினாக நடித்திருப்பேன். 19 கோடி ஓட்டுகள் எனக்கு ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் அதற்கு எப்போதுமே உண்மையாக இருப்பேன் என சொல்லியிருந்தார். எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் ரிலாக்ஸ் செய்ய சம்மருக்கு முன்பாகவே கொஞ்சம் வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் கொடைக்கானலில் சில் பண்ண சென்றுள்ளார்.

டிமான்டி காலனி 2: ரைஸிங் ஸ்டார் என்கிற விருது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்களால் அர்ச்சனாவுக்கு கிராண்ட் ஃபினாலேவில் கொடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்களும் அர்ச்சனாவை ரைஸிங் ஸ்டார் என்றே அழைத்து வருகின்றனர். அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள டிமான்டி காலனி 2 படத்தில் முக்கிய வேடத்தில் அர்ச்சனா நடித்துள்ளார். இவர் டைட்டிலை வென்றதற்கு அந்த படக்குழுவினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ’அவள் என்னவள்’ எனும் வெப்சீரிஸில் நடித்துள்ள அர்ச்சனா சீக்கிரமே ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X