Bigg Boss Tamil 7: வனிதா விஜயகுமார் பொண்ணு செம உஷாரு.. உயிரே உயிரே தப்பிச்சு எப்டியாவது ஓடிவிடு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சீசனில் இடம்பெற்றதை போல விக்ரமன், அஜீம் போல இன்னும் யாருமே வெயிட்டான தொடக்கத்தை தொடங்கவில்லை என்றாலும், விஷ்ணு மற்றும் பிரதீப் ஆண்டனி பலருடன் சண்டை போட்டு அந்த ரூட்டை ஃபாலோ பண்ண முயற்சித்து வருகின்றனர்.
வாழ்க்கையில் பல அடிகளையும் மிதிகளையும் வாங்கி ஒரு மார்க்கமாக வித்தியாசமான சிரிப்புடன் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக மாறியுள்ள உதவி இயக்குநரும் அருவி பட நடிகருமான பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்தே கன்டென்ட் கொடுக்க பலருடன் கச்சேரி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் argue பண்ணிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாமல் உள்ளே நுழைந்து ஏன் தலையை கொடுப்பானேன் என வனிதா விஜயகுமார் ரிவர்ஸ் கியர் போட்டு போன வீடியோ காட்சி பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வனிதா மகள்: சினிமாவில் வனிதா விஜயகுமார் மகள் அறிமுகமாக போகிறார் என்றும் விஜய் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவர் தான் ஹீரோயின் என்றெல்லாம் வதந்திகள் அதிகம் பரவி வந்தன. இந்நிலையில், தனது மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் ட்ரையல் பார்க்க அனுப்பியிருக்கிறார் வனிதா என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
மேக்கப் இல்லைன்னாலும் அழகு: வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், போட்டியாளர்களை பெயர் சொல்லி அழைப்பது, போல்டாக பேசுவது, பாயின்ட்டை பிடித்து பேசி மடக்குவது என மாஸ் காட்டுகிறார். கூல் சுரேஷிடம் மேக்கப் போடலைன்னாலும் பெண்கள் அழகு தான் என்றும் அது அவர்கள் தனிப்பட்ட விஷயங்கள் என பேசி அவரை திணறடித்திருந்தார்.
உயிரே உயிரே தப்பிச்சு ஓடிவிடு: இந்நிலையில், அக்ஷயா உதயகுமாரிடம் பிரதீப் ஆண்டனி சண்டை பொடுவது போல பேசிக் கொண்டிருக்கும் போது பாத்ரூம் ஏரியாவுக்குள் நுழைய பார்த்த ஜோவிகா உஷாராக இப்போ அங்கே போனால், தேவையில்லாமல் நம்ம பக்கம் திரும்பி விடுவார் என நினைத்து அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு பின்னோக்கி சென்று அங்கிருந்து எஸ்கேப் ஆகிய காட்சியை பார்த்த ரசிகர்கள் வனிதா மகள் என்றால் சும்மாவா எப்படி உஷாரா இருக்காரு பாருங்க என "உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு" வடிவேலு டயலாக்கை போட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











