Bigg Boss Tamil 7: ஜூனியர் வனிதா முதல் பிரபல எழுத்தாளர் வரை... களைகட்டும் பிக் பாஸ் சீசன் 7!!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நாளை (அக்.1) முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு வீடுகள் என்பதால் மொத்தம் 20 போட்டியாளர்கள் வரை இந்த சீசனில் கலந்துகொள்ளதாகக் கூறப்படுகிறது.

வனிதாவின் மகள், பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை என வெயிட்டான போட்டியாளர்களுடன் களைகட்டத் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7.

 Bigg Boss Tamil 7: Vanithas daughter, writer Bava Chelladurai will participate in Bigg Boss season 7

களைகட்டிய பிக் பாஸ் சீசன் 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை முதல் தொடங்குகிறது. வழக்கம் போல உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் முதன்முறையாக இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதற்கட்ட தகவலின் படி, பிக் பாஸ் சீசன் 7ல் 90ஸ் ஃபேவரைட் நடிகர் பப்லு பிருத்விராஜ், கூல் சுரேஷ், பாடகரும் நடிகருமான யுகேந்திரன், ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இவர்களுடன் மேலும் சில பிரபலங்களும் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளார்களாம். அதில், பூர்ணிமா ரவி, இயக்குநர் பிரதீப் அந்தோணி, விஜய் டிவி புகழ் நிக்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், 'பாரதி கண்ணம்மா' வினுஷா தேவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் அசரடித்த மணி சந்திரா, அக்‌ஷயா உதயகுமார் ஆகியோரும் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7ல் களமிறங்குகிறார். கடந்த சீசனில் வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் மாஸ்டர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரையும் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொள்வது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், நடிகைகள் விசித்ரா, உமா ரியாஸ், சீரியல் நடிகர் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் நடிகர் சரவணன், மாடலிங் கேட்டகரியில் மலேசியாவைச் சேர்ந்த மூன் நிலா, பாலாஜி முருகதாஸின் நண்பர் அனன்யா ராவ், அமீரைத் தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்த ஐஷூ, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், விஜய் டிவி ரக்ஷன், வீஜே பார்வதி ஆகியோரும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X