BB7: இவ்ளோ வக்கிரம் புடிச்சவனா நிக்சன்?.. அசிங்கமா இல்லை.. பொங்கி எழுந்த பாரதி கண்ணம்மா வினுஷா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பெண்களின் பிரச்சனையை வைத்து தற்போது சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இவங்க டிஆர்பிக்கு யாரை வேண்டுமானாலும் அசிங்கப்படுத்துவாங்க என்பது போல உள்ளே நிக்சன் அடிக்கும் கூத்துகளை அப்படியே காண்பித்து ஏகப்பட்ட இளம் பெண்களின் மனங்களையும் கெடுத்து வருகின்றனர்.
ரக்கட் பாயாக இருந்தால் தான் பிடிக்கும் என சொல்லிக் கொண்டு திரியும் பெண்களின் வகைதான் ஐஷுவின் வகையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், வினுஷா குறித்து ஐஷுவிடம் அப்படி மோசமாக நிக்சன் பிக் பாஸ் வீட்டுக்குள் பேசியதற்கு எவிக்ட்டான வினுஷா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

வார இறுதியில் கமலுக்கு கன்டென்ட் கிடைப்பதே பிரச்சனையாக இருந்து வந்த சீசனில் இப்படி வாரம் முழுவதும் ஏகப்பட்ட கன்டென்ட் கிடைத்திருக்கும் நிலையில், கமலே பலருக்கு கன்டென்ட் ஆகியிருப்பது தான் செம என்டர்டெயின் மென்ட்.
பாரதி கண்ணம்மாவுக்கே பாடி ஷேமிங்: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கடைசி நேரத்தில் கண்ணம்மாவாக வந்து நடித்த வினுஷா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றார். சமீபத்தில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறிய வினுஷாவின் உடல் குறித்து படுமோசமாக நிக்சன் ஐஷுவிடம் வர்ணித்து பேசிய வார்த்தைகளை பிக் பாஸ் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

ரொம்ப கேவலமானவன்: முதல் வாரத்தில் நிக்சனுக்கும் எனக்கும் நல்ல விதமான பேச்சுவார்த்தைகள் இருந்து வந்தது. அவனை ஒரு சகோதரன் போலத்தான் நினைத்து பழகி வந்தேன். என்னை கிண்டல் செய்து வந்த நிலையிலும், அவன் தவறான நோக்கத்தில் கிண்டல் செய்கிறான் என நினைக்கவில்லை. ஆனால், அவன் என்னை பாடி ஷேமிங் பண்ணது பற்றி எனக்கு சுத்தமா தெரியாது. வெளியே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் அவன் எவ்ளோ கேவலமானவன் என புரிகிறது என விளாசி உள்ளார்.

ஆபாசமா எப்படி பேசலாம்?: ஒரு பெண்ணுக்கு எது எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எதுவுமே இல்லாத ஒரு பெண்ணாக வினுஷா இருக்கிறார் என நிக்சன் பேசியது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. உண்மையில் பிரதீப் ஆண்டனியை விட மோசமான பெண் பித்து பிடித்து அலைபவன் நிக்சன் தான் என்றும் கமல் அவனுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்புவாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











