ஆரம்பமே.. மனைவி என மகாலட்சுமியை காட்டாமல்.. ஃபேட்மேன் பார்த்த வேலை.. மக
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதியான இன்று தொடங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்கப்போகிறார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மக்கள் செல்வன் இதெல்லாம் எனக்கு அசால்ட் மேட்டர் என மாஸ் காட்டி வருகிறார்.
பிக் பாஸ் வீட்டின் துவக்க விழா நிகழ்ச்சி பெரும்பாலும் கலை நிகழ்ச்சிகளுடன் வெறும் அறிமுகமாக மட்டுமே இருக்கும். வீட்டில் சிறை தான் சற்றே மாறுபட்டு இருக்கும். ஆனால், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி கோட்டை கிழிடி என விசு சொல்ல போடப்பட்ட கோடு போல வீட்டையே பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என பிரித்துள்ளனர்.

6வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் ஆனந்தி உள்ளே நுழைந்ததுமே சண்டையும் இனிதே இந்த சீசனில் ஆரம்பம் ஆகிவிட்டது.
சிங்கிள் பெட் யாருக்கு: ஒரு பக்கம் டபுள் பெட்ரூம் செட்டப் மற்றும் இன்னொரு பக்கம் சிங்கிள் பெட்ரூம் செட்டப் இருக்க யார் எந்த பக்கம் போகப் போறீங்க என்பதை பேசி முடிவு செய்யுங்க என பிக் பாஸ் ஆர்டர் போட ஆண்கள் அணியில் உள்ளே இருந்த ரவீந்தர், சத்யா, தீபக் உள்ளிட்டோர் உள்ளிருக்க அவர்கள் தங்களுக்கு சிங்கிள் பெட் வேண்டும் எனக் கேட்டனர். அதே போல ஆனந்தி, தர்ஷா குப்தா மற்றும் சச்சனா என கேர்ள்ஸ் டீம் எங்களுக்கும் அதே தான் வேண்டும் எனக் கேட்க ஆரம்பமே சண்டையை மூட்டி விட்டார் நம்ம நாரதர் பிக் பாஸ்.
ஆனந்தி அலப்பறை: பிக் பாஸ் வீட்டில் அனிதா சம்பத்தை விட இந்த சீசனில் ஆனந்தி அதிகம் பேசுவார் என்றே தெரிகிறது. கோமாளி படத்தில் நடித்த ஆனந்தி புத்தகங்கள் பற்றி பேசும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். ரவீந்தர் கூடவே ஆரம்பத்திலேயே எங்களுக்குத்தான் ரெடியாக லேட்டாகும் எங்களுக்குத்தான் சிங்கிள் பெட் போர்ஷன் வேண்டும் என பேசி அலப்பறையை ஆரம்பித்துள்ளார்.
வெளியே துரத்திய பிக் பாஸ்: இரண்டு டீமும் ஒரே இடத்தை கேட்ட நிலையில், கடுப்பான பிக் பாஸ் வெளியே போய் யாருமே பேசிக் கொள்ளாமல் அமைதியா இருங்க அப்புறம் நான் கூப்பிடுறேன் என ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்து அனுப்பி விட்டார். இந்த கோடு மேட்டர் இந்த சீசனில் பெரிய பஞ்சாயத்து ரோடே போடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











