Bigg Boss 8 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த இருவரில் யார்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் மிக்சர் போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனில் இருப்பார்கள். ஆனால், 8வது சீசனில் அப்படி யாரையும் சொல்லி விட முடியாது அந்த அளவுக்கு போட்டிப் போட்டு விளையாடி வருகின்றனர். வெற்றி தோல்வியை எல்லாம் தாண்டி அனைவரும் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்றும் முயற்சிப்பதே சிறப்பாக உள்ளது.
க்ரூப் சேர்ந்துக் கொண்டு ஒரு சிலரை மட்டுமே நாமினேட் செய்துக் கொண்டிருக்கும் விளையாட்டையும் இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடவில்லை. இந்நிலையில், இந்த வாரம் 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

அதில், கடைசி இடத்தில் ஆஃப் லைன் ஓட்டிங்கில் உள்ள இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் உறுதியாக வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 பேர் நாமினேஷன்: அர்னவ், செளந்தர்யா, தர்ஷா குப்தா, ஜெஃப்ரி, தீபக், ஜாக்குலின், விஜே விஷால், ரஞ்சித், சாச்சனா மற்றும் முத்துக்குமரன் என 10 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். ஆண்கள் vs பெண்கள் என பிக் பாஸ் வீடே இந்த சீசனில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் யாரு கெத்து என்கிற போட்டி இந்த வாரம் நடைபெற்றது. இதில், பெண்கள் அணி வெற்றிப் பெற்றுள்ளனர். கடந்த வாரம் ரவீந்தர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஆண் போட்டியாளர் வெளியேறுவாரா அல்லது பெண் போட்டியாளர் வெளியேறுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
சேஃப் ஜோன்: செளந்தர்யா, விஜே விஷால், முத்துக்குமரன் மற்றும் ரஞ்சித் சேஃப் ஜோனில் உள்ளனர். கடந்த வாரம் நாமினேஷனில் விளிம்பில் சிக்கியிருந்த ரஞ்சித் இந்த வாரம் சேஃப் ஜோனில் உள்ளார். அவருக்கு மக்களின் வாக்குகள் கிடைப்பதாகவே தெரிகிறது. தொடர்ந்து தனது கேமை விளையாடி வருகிறார் நடிகர் ரஞ்சித்.
டேஞ்சர் ஜோன்: ஜெஃப்ரி, ஜாக்குலின், தர்ஷா குப்தா, அர்னவ், சாச்சனா மற்றும் தீபக் உள்ளிட்ட போட்டியாளர்கள் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். ஏற்கனவே சாச்சனா வெளியேறிவிட்டு மீண்டும் உள்ளே வந்துள்ளார். ஆனால், அவருக்கு தொடர்ந்து ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்கவில்லை.
2 பேரில் ஒருவர்: கடைசி இடத்தில் தர்ஷா குப்தா மற்றும் அர்னவ் என 2 பேர் எவிக்ஷன் விளிம்பில் உள்ளனர். அர்னவ் தனது காதலி அன்ஷிதாவை தனியாக தவிக்கவிட்டு வெளியேறுவாரா? அல்லது குக் வித் கோமாளி போயும் சமைக்கத் தெரியல என பிக் பாஸ் வீட்டில் கலாய்க்கப்பட்டு கதறி அழுத கவர்ச்சி தேவதை தர்ஷா குப்தா இந்த வாரம் எலிமினேட் ஆவாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். இவர்களுக்கு பதிலாக வேறு யாரையாவது பலியாடு ஆக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
விஜய் சேதுபதியை பார்க்க ஆர்வம்: பிக் பாஸ் நிகழ்ச்சி வீக் டேஸிலேயே பரபரப்பாகத் தான் செல்கிறது. ஆனால், வீக்கெண்டில் விஜய் சேதுபதி வந்து தக் லைஃப் காட்டி வரும் நிலையில், விஜய் சேதுபதியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காண ஏகப்பட்ட ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வார வீக்கெண்ட் ஷோ எப்படி இருக்கு யாரு அந்த மாதிரி கோப்பையை உடைக்கப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











