ஸ்கூல்ல எதுக்கு லவ் டிராமா?.. பிக் பாஸ் வீட்டில் ஒருவழியாக வெடித்த சண்டை.. சவுண்டு டென்ஷனாகிடுச்சே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 38 நாட்கள் ஆகியும் எந்தவொரு ஃபயரும் இல்லாமல் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போலவே போட்டியாளர்கள் அட்டக்கத்தியாக செயல்பட்டு டாஸ்க்குகளை மட்டுமே செய்து வந்தனர். ரியலாகவே இல்லை என்றும் இந்த சீசனில் என்ன இன்னும் ஒருத்தர் கூட சண்டை போடவில்லை என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அப்படியொரு தரமான புரமோவை இன்று விஜய் டிவி இறக்கியுள்ளது.

3 புரமோக்களில் சூடு பிடிக்காத பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெளியான 4வது புரமோவால் செம சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும், நிகழ்ச்சியை போராக நடத்த முடியாது என நினைத்த பிக் பாஸ் இயக்குநர், வாக்கி டாக்கி மூலமாக கொடுத்த காசுக்கு மேல கூவுங்க என்றதும் பிக் பாஸ் வீட்டில் ஒருவழியாக சண்டை வெடித்து விட்டது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

bigg boss tamil bigg boss tamil 8 television

பிக் பாஸ் ஸ்கூலில் ஏகபோகமாக லவ் டிராமாவை ஆரம்பித்த போதே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதை வைத்தே சண்டை வெடிக்க சவுண்டு என அழைக்கப்படும் செளந்தர்யா பக்கத்தில் உட்கார்ந்தாலே லவ்வா? என வெறி பிடித்தவர் போல கத்தி கூச்சலிடும் புரமோ வெளியாகி உள்ளது.

ஸ்கூலா டவர் பார்க்கா?: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல இந்த சீசனிலும் ஸ்கூல் டாஸ்க் இடம்பெற்றுள்ளது. அதே பழைய கலை அலங்காரத்தையும் ஏற்கனவே தைத்து வைத்த யூனிஃபார்மையும் ரெடி செய்து போட்டியாளர்களுக்கு மாட்டி விட்டுள்ளனர். வைஸ் பிரின்ஸிபிளாக நடித்து வரும் அருணே பிரின்ஸிபாலை காதலிப்பது போன்று கான்செப்ட் கொடுக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் அதை விட மோசமாக காதலித்து வருவது போல நடித்து வருகின்றனர். ஸ்கூலா இல்லை டவர் பார்க்கா? என்றே போட்டியாளர்களே கேட்கும் அளவுக்கு எல்லை மீறி சென்று விட்டது இந்த டாஸ்க்.

கொளுத்திப் போட்ட ராணவ்: வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த ராணவ் அர்னவ் மாதிரி அமைதியாக இருப்பார் என நினைத்துக் கொண்டு இருந்த செளந்தர்யாவுக்கு அவர் கொளுத்திப் போட்ட விஷயம் பிடிக்காமல் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார். பக்கத்தில் உட்கார்ந்தாலே லவ்வா? என சவுண்டு சத்தம் அதிகமாக கேட்கும் 4வது புரமோ நிச்சயம் இன்று ஏகப்பட்ட ரசிகர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வைத்துவிடும் என்றும் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு நல்ல வேட்டை கன்ஃபார்ம் என்றும் கூறி வருகின்றனர்.

சறுக்கும் செளந்தர்யா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் திடீரென செளந்தர்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடி வரும் நிலையில், இந்த வாரம் முழுக்க செளந்தர்யாவை டோட்டல் டேமேஜ் செய்யும் வேலைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது என்கின்றனர். செளந்தர்யாவின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து விட்டது என்றும் அவர் டைட்டில் வின்னராக எல்லாம் ஆக முடியாது என்றும் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ராணவ் ராக்க் செளந்தர்யா ஷாக்ட் என கலாய்த்து வருகின்றனர். இப்போதாவது சூடு பிடித்திருக்கிறதே நிகழ்ச்சி இது தொடர்ந்தால் சரிதான் என ரசிகர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X