Bigg Boss 8: இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பேர்.. எவிக்ட் ஆகி வெளியேறப்போவது இந்த 2 பேரில் யார்?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 வாரங்களை கடந்து விட்டது. இரவு ஒளிபரப்படும் எபிசோடு மட்டுமின்றி 24 மணி நேரமும் வீட்டில் என்னவெல்லாம் பஞ்சாயத்து நடக்கிறது என்பதை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். எல்லாவற்றையும் விட வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி வந்து மாஸ் காட்டுவதை பார்த்து இவர் தான் பெஸ்ட் ஹோஸ்ட் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்தது நாமினேஷன் ப்ராசஸ் தான். போட்டியாளர்கள் எவிக்ட் ஆக காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் இல்லை. மக்கள் தான் என விஜய் சேதுபதி ஆட்டத்தையே புரிந்துக் கொள்ளாமல் சொல்கிறார் என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

bigg boss tamil bigg boss tamil 8 anshitha

உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கட்டம் கட்டி நாமினேட் செய்யும் நபர்களைத்தான் மக்கள் ஓட்டுப் போட்டு வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் சில மிக்சர் போட்டியாளர்கள் தப்பித்து விட்டார்கள் என்றும் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் வெளியேறப்போவது அந்த காதல் புறா தானா? என்றும் யூகங்கள் கிளம்பியுள்ளன.

8 பேர் நாமினேஷன்: கடந்த வாரம் 10 பேர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். க்ரூபிஸம் அதிகம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் நாமினேஷனில் போட்டியாளர்கள் வார வாரம் சிக்கி வருகின்றனர் என்பதே ஆரோக்கியமான விஷயம் தான். இந்த வாரம் ஓபன் நாமினேஷனில் அருண் மற்றும் தர்ஷா குப்தா சிக்கிய நிலையில், 6 போட்டியாளர்கள் கன்ஃபெஷன் ரூம் நாமினேஷனில் சிக்கினர். 6 ஓட்டுகளுடன் செளந்தர்யா அவரை தொடர்ந்து 5 ஓட்டுகளுடன் ஜாக்குலின் மற்றும் அன்ஷிதா மேலும், 2 ஓட்டுகளுடன் முத்துகுமரன், பவித்ரா மற்றும் சத்யா நாமினேட் ஆகியுள்ளனர்.

நாமினேட் ஆகாதவர்கள்: இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 8ல் நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆனவர்கள் யாரென்றால் ரஞ்சித், தீபக், சாச்சனா, ஜெஃப்ரி, சுனிதா, விஜே விஷால், விஜே ஆனந்தி மற்றும் தர்ஷிகா உள்ளிட்ட போட்டியாளர்களை யாருமே நாமினேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் ஆதரவு: இந்த 8 பேரில் மக்களின் ஆதரவு அதிகப்படியாக செளந்தர்யா மற்றும் முத்துக்குமரனுக்கு உள்ளது. அவர்கள் இருவரும் அதிக ஓட்டுகளை பெற்று சேவ் ஆகிவிடுவார்கள் என்றே தெரிகிறது. அவர்களை தொடர்ந்து சத்யா, அருண் மற்றும் பவித்ராவுக்கும் கணிசமான ஆதரவு இருப்பதாகவே தெரிகிறது.

டேஞ்சர் ஜோனில் 3 பேர்: இந்த வாரமும் டேஞ்சர் ஜோனில் ஜாக்குலின் வந்துள்ளார். கடந்த வாரம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை வென்று எஸ்கேப் ஆகி விட்டார். அவரை தொடர்ந்து இந்த வாரமும் தர்ஷா குப்தா எதுக்கு பிக் பாஸ் வீட்டுக்கு வந்தோம் என்றே தெரியாமல் விளையாடி வரும் நிலையில், ரசிகர்களின் வாக்குகள் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை. கடைசியாக அன்ஷிதா வசமாக சிக்கியுள்ளார். 5 பேர் அவரை நாமினேட் செய்துள்ளனர்.

அர்னவை தொடர்ந்து அன்ஷிதா?: அர்னவ் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்ட நிலையில், அன்ஷிதா ரொம்பவே மனம் உடைந்து விட்டார். இந்த வாரம் அவரையும் பேக்கப் செய்ய பிக் பாஸ் போட்டியாளர்கள் முடிவு கட்டி அவருக்கு அதிக ஓட்டுகளை கொடுத்துள்ளனர். அன்ஷிதா இந்த வாரம் விளையாடி தன்னை நிரூபிப்பாரா? அல்லது அர்னவை உடனடியாக பார்க்க வெளியேறுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். தர்ஷா குப்தா அல்லது அன்ஷிதா என இந்த வாரம் பெண் போட்டியாளர் தான் எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரவீந்தர் மற்றும் அர்னவ் என 2 ஆண் போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X