Bigg Boss Tamil 8 Salary: பிக் பாஸ் வீட்டில் இந்த 2 பேருக்குத்தான் அதிக சம்பளமா?.. மத்தவங்களுக்கு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகல துவக்க விழாவுடன் விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கமல்ஹாசன் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஷோவிலேயே பிக் பாஸ் தொகுப்பாளராக கலக்கி விட்டார் மக்கள் செல்வன்.
விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் ஒட்டுமொத்தமாக 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனுக்கு 60 முதல் 80 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கும் எனக் கூறுகின்றனர். இந்தியாவிலேயே அதிக பட்சமாக இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்குத்தான் 180 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு மாதத்திற்கு 60 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட்டை தாண்டி இந்த சீசனில் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.
ரஞ்சித் - ரவீந்தருக்கு தான் அதிகம்: பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டு 2வது நாளிலேயே சண்டை போட்டு கன்டெண்ட் கொடுக்க ஆரம்பித்துள்ள ரவீந்தர் மற்றும் ரஞ்சித்துக்குத் தான் 18 போட்டியாளர்களில் அதிக சம்பளம் எனக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இவர்கள் இருவரும் 100 நாட்கள் இருந்தால் 50 லட்சம் பரிசு கொடுக்கவே தேவையில்லை. சம்பளமே 50 லட்சம் வந்து விடும் என்கின்றனர்.
தீபக் - சாச்சனா சம்பளம்: ரவீந்தர் மற்றும் ரஞ்சித்தை தொடர்ந்து அதிக சம்பளம் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த நடிகை சாச்சனா மற்றும் பல வருடங்களாக சின்னத்திரை இளவரசனாக வலம் வரும் தீபக் உள்ளிட்டோருக்கு தினமும் 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதனால் தான் சாச்சனாவை ஒரே நாளில் அனுப்பிட்டீங்களா பிக் பாஸ்.
ஜாக்குலின் - தர்ஷா குப்தாவுக்கு எவ்வளவு?: விஜய் டிவியின் தொகுப்பாளினியான ஜாக்குலினுக்கு அடுத்தபடியாக 25 ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமாக வழங்கப்படுகிறதாம். குக் வித் கோமாளி மூலம் பிரபலமாகி சினிமா ஹீரோயினாக மாறிய தர்ஷா குப்தாவுக்கும் 25 ஆயிரம் சம்பளமாம்.
மற்றவர்களுக்கு எவ்வளவு?: மற்ற போட்டியாளர்களான பாரதி கண்ணம்மா அருண் பிரசாத், அர்ணவ், அன்ஷிதா, சுனிதா கோகோய், விஜே விஷால், தர்ஷிகா, சத்யா என சீரியல் நடிகர்களுக்கு அவர்கள் சீரியலில் வாங்கும் சம்பள அடிப்படையில் இங்கேயும் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இந்த போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்துக் கொண்டு சம்பாதித்து வருகின்றனர்.
குறைவான சம்பளம் யாருக்கு?: கானா பாடகர் ஜெஃப்ரி, செளந்தர்யா, ஆர்ஜே ஆனந்தி மற்றும் முத்துக்குமாருக்கு தான் இருப்பதிலேயே குறைவான சம்பளம் என்றும் இவர்களுக்கு தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கபடுகிறதாம். 50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் ரஞ்சித் அல்லது ரவீந்தர் இருவரில் ஒருவரை இந்த வாரமே வீட்டுக்கு அனுப்பும் முடிவில் விஜய் டிவி இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











