17 ரவுடி இருக்காங்க.. கடைசியா வந்த ஜாக்குலின்.. பிக் பாஸ் 8 கோப்பை.. விஜய் சேதுபதி சொன்ன மேட்டர்!
சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளினிகள் ஒரு ஷோவுக்கு சென்றாலே ஆட்டோமேடிக்காக அந்த சீசன் கோப்பையை அவர்கள் கைகளில் கொடுக்கும் வழக்கமே மாறிவிட்டதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு கோப்பையை கொடுத்ததில் இருந்தே ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கூட ராஜு ஜெயமோகன் கொஞ்சம் அசந்து இருந்தாலும் ரன்னர் அப்பான பிரியங்கா தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக மாறியிருப்பார் என்கின்றனர்.

18வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஜாக்குலின் விஜய் சேதுபதியை பார்த்து என்னை யாராவது பெரிய ரவுடி கிட்ட கூட்டிட்டுப் போக முடியுமா என நானும் ரவுடி தான் காதும்மா மாதிரி பேசிய நிலையில், அவர் காதிலேயே அடிப்பது போல உள்ளே 17 ரவுடி இருக்காங்க போங்க என விஜய் சேதுபதி சொல்லி அனுப்பி விட்டார்.
இதெல்லாம் ஃபேக்: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் ஐஸ்வர்யா, ஷாலின் ஜோயா, கோகுல்நாத், விடிவி கணேஷ், பால் டப்பா, பூனம் பஜ்வா, ஆல்யா மானசா என கடைசி நேரத்தில் ஏகப்பட்ட கெஸ்ஸிங் போட்டியாளர்கள் லிஸ்ட் வந்த நிலையில், இந்த பட்டியல் எல்லாம் ஃபேக் என ஆகிவிட்டது. இவர்கள் யாருமே பிக் பாஸ் வீட்டுக்கு இந்த சீசனில் வரவில்லை.
18 போட்டியாளர்கள் யார் யார்?: பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ போட்டியாளர்களாக உள்ளே 18 பேர் நுழைந்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர், சச்சனா, தர்ஷா குப்தா, தீபக், சுனிதா கோகோய், சத்யா, விஜே விஷால், அர்ணவ், ரஞ்சித், அன்ஷிதா, செளந்தர்யா, அருண், பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, தர்ஷிகா, முத்துகுமரன் மற்றும் ஜாக்குலின் என 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
17 ரவுடிகள்: என்னை யாராவது பெரிய ரவுடிகிட்ட கூட்டிட்டுப் போக முடியுமா என விஜய் சேதுபதியிடம் வலிந்த ஜாக்குலினை பார்த்து கலாய்த்தபடியே பிக் பாஸ் வீட்டுக்குள் 17 ரவுடிகள் இருக்காங்க உள்ளே போய் அவங்களிடம் சண்டை போடுங்க என சொல்லி அனுப்பி விட்டார்.
முதல் நாளே ஓவர் சீன்: பிரியங்கா பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவரை பயங்கர டாமினன்ட்டாக இருந்து கன்டென்ட் கொடுத்தது போல முதல் நாளே உள்ளே சென்ற ஜாக்குலின் ஆண்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. யாரையுமே ஒரு வாரத்துக்கு நாமினேட் பண்ணக் கூடாது என்றால் எப்படி, நான் விட்டா தரையில கூட படுத்துப்பேன் அந்த சிங்கிள் பெட்டில் படுக்க மாட்டேன் என கடைசி வரை வம்படியாக நிற்கிறார்.
பிக் பாஸ் கோப்பையை கொடுத்துடுங்க பாஸ்: இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் கோப்பையையும் விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலினுக்கு கொடுத்துடுங்க பாஸ் என இப்பவே நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஜாக்குலின் சொல்வது சரி தான் என்றும் பெண் போட்டியாளர்கள் சொகுசு விரும்பிகளாக இருப்பது சரி அல்ல என்றும் ஜாக்குலின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முதல் எவிக்ஷனே ஜாக்குலினா?: முதல் எவிக்ஷனாக உன்னை வெளியே அனுப்பினால் போவியா என தீபக் கேட்க, போகிறேன் என ஜாக்குலின் தில்லாக சொல்லிவிட்டு இரவு செல்கிறார். ஆனால், அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் டாப் ஃபைனலிஸ்ட் ஜாக்குலின் என்றும் கூறி வருகின்றனர். வெயிட் பண்ணிப் பார்ப்போம்! இந்த ஆட்டம் நல்லா இருக்கு பாஸ்!


Click it and Unblock the Notifications











