சுனிதாவுக்கு கட்டிப்புடி.. அந்த போட்டியாளருக்கு 6 முறை முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி.. கனெக்டட்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்காத நிலையில், விஜய் சேதுபதி புதிதாக பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இதுவரை கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், சிம்பு உள்ளிட்டோர் தொகுத்து வழங்கிய நிலையில், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக விஜய் சேதுபதி டீல் செய்து விட்டார் என்றே ரசிகர்கள் துவக்க விழா நிகழ்ச்சியை பார்த்ததுமே ரொம்பவே கனெக்ட்டட் ஆகி விட்டனர்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் பலருடனும் கனெக்ட் ஆன விஜய் சேதுபதியை பெண் போட்டியாளர்கள் எல்லாம் சைட் அடிக்கவும், சுனிதா கட்டிப்பிடிக்கவும் செய்தார். இன்னொரு போட்டியாளருக்கு விஜய் சேதுபதி முத்தமும் கொடுத்துள்ளார்.

புது ஹோஸ்ட் எப்படி?: பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் 7 சீசன்களாக தொகுத்து வழங்கியுள்ளார். நடுவே அவருக்கு உடல்நிலை முடியாத போது நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்காக விடுப்பு எடுத்த நிலையில், சிம்பு பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறியிருந்தார். கமலுக்கு அடுத்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக கையாண்டு இருப்பதாக முதல் நாளிலேயே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். போர் அடிக்காமல் சுவாரஸ்யமாக சொந்த கதையை அதிகம் பேசாமல் விஜய் சேதுபதி கொண்டு செல்வது இயல்பாகவும் இண்ட்ரஸ்டிங்காகவும் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.

அப்பா பாசம்: 2வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சச்சனா வந்த உடனே எதுக்கு இங்கே வந்த என்று உரிமையுடன் கேட்ட விஜய் சேதுபதி, கூட்டத்தில் ஒருத்தர் சொல்லி வைத்தது போல கத்த அப்பாவுக்கு முன்னாடியே மகளை கூப்பிடுவியா என வெளுத்து வாங்கினார். அப்பான்னு தோணுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுனா சார்னு கூப்பிடு என ஆரம்பத்திலேயே அப்பா பாசத்தை பிழிந்து கொட்டி விட்டார்.

சுனிதாவுக்கு கட்டிப்பிடி: பிக் பாஸ் வீட்டில் சுனிதா கோகோய் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், அவரது தமிழை ரசித்த விஜய் சேதுபதி அவரிடம் கவிதை எல்லாம் கேட்டு ரசித்தார். கடைசியில் கமல் சார் இங்கே இல்லை அவருடைய கட்டிப்பிடி வைத்தியத்தை நான் பின்பற்றுகிறேன் என விஜய் சேதுபதி சொல்லிவிட்டு சுனிதாவை கட்டியணைத்து வீட்டிற்குள் அனுப்பினார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

6 முறை முத்தம்: விஜே விஷால் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், அவர் உங்களிடம் இதுவரை 5 முறை முத்தம் வாங்கியிருக்கேன் அண்ணா இப்போதும் முத்தம் கொடுத்து அனுப்புங்கள் எனக் கூற விஜய் சேதுபதி முத்தம் கொடுத்து விட்டால் அதன் பின்னர் உள்ளே நீங்க தப்பு பண்ணா கண்டிக்க மாட்டேன்னு நினைக்காதீங்க என்றார். விஜய் சேதுபதி முத்தம் தர மறுத்து விட்டாரோ என நினைக்கும் போது உடனே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தான் எப்போதுமே மக்கள் செல்வன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X