Arnav: வெளியேறிய அர்னவ்.. கட்டிப்பிடித்து கதறி அழுத அன்ஷிதா.. போகும் போது கோபத்தில் செய்த வேலை!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் முடிந்து மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் வெளியேறிய நிலையில் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்த நடிகர் அர்னவ் வெளியேறி உள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காக அர்னம் கோவத்தில் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறியதை அடுத்து 17 போட்டியாளர்கள் வீட்டில் இருந்தனர். இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கில் வெற்றி பெற்று சத்யா இரண்டாவது வாரத்திற்கான கேப்டனாக இருந்தார். அதன் பின் நடந்த இந்த வார நாமினேஷனில், ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சச்சனா என 10 பேர் வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.

bigg boss tamil bigg boss 8 arnav 8

அர்னவ் வெளியேறினார்: இதில், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில், தர்ஷாவைவிட குறைவான வாக்குகளை பெற்ற அர்னவ் பிக் பாஸ் வீட்டில் வெளியேறினார். அர்னவ் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக விளையாடவில்லை என்றும், அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் அவருக்கு நெகடிவ் விமர்சனங்கள் இருந்தது தான், இவர் இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமா கூறப்படுகிறது.

கதறி அழுத அன்ஷிதா: நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா,முத்து,அர்னவ் மூன்று பேரையும் சேஃப் என்று சொல்லாமல் இருந்த விஜய்சேதுபதி,கடைசி நேரத்தில் அர்னவ் பெயரை அறிவித்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத அர்னவ், பதறிப் போனாலும் நிதானமாகவே இருந்தார். இதையடுத்து,பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற, பிக் பாஸ் ட்ராபியை ஆத்திரத்தில் தூக்கி சுக்குநூறாக உடைத்தார்.அந்த நேரத்தில்,அன்ஷிதா, அர்னவை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுதுக்கொண்டு இருந்தார்.இதையடுத்து, விஜய் சேதுபதியிடம் வந்த் அர்னவ், 14 நாட்களுக்குள் வெறியேறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றார்.

பாய்ஸ் ஜால்ராஸ்: இதையடுத்து, பெண்கள் அணி சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால்,சத்யா,தீபக்,விஷால்,அருண் நீங்க எல்லாம் நல்லா ஜால்ரா அடிக்கிறீங்க. நான் உங்களிடம் சரியாக பேசாததால் என்னை ஒதுக்கிவிட்டீர்கள் என் ஆண் போட்டியாளர்களை பார்த்து கேள்வி கேட்க, அப்போது குறுக்கிட்ட விஜய்சேபதி,உங்கள் கருத்துக்களை சொல்லுங்க என்று தான் சொன்னேன், வன்மத்தை கக்கும் இடம் இது இல்லை. இவ்வளவு நேரம் இவர்களுடன் இருந்துவிட்டு,வெளியில் வந்தவுடனே, டேய்... என்று இப்படி பேசுவது அநாகரீகம் அப்படி பேசாதீர்கள். மற்றவர்களுக்கு நாம் மரியாதை கொடுப்பதில் தான் நமக்கான மரியாதை இருக்கும் என்று சரியான நோஸ்கட் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X