பிக்பாஸ் வீட்டுக்குள் விஜே பார்வதி புகழ்.. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அசிங்கப்படுத்திய பிக்பாஸ்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் போட்டியாளர் ரெட் கார்டு பெற்றது இந்த சீசனில்தான் நடந்திருக்கிறது. விஜே பார்வதியுடன் கம்ருதீனும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இரண்டு பேரையும் இப்படி நடத்தியதுதான் சரி என்று பலரும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பார்வதி புகழ் பாட ஆரம்பித்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அசிங்கப்படுத்திவிட்டார் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடையவிருக்கிறது. இந்த சீசனின் சென்சேஷனலாக விஜே பார்வதியும், கம்ருதீனும் மாறிவிட்டார்கள். சக போட்டியாளரான சான்ட்ராவை டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது அவர்கள் இரண்டு பேரும் எட்டி உதைத்ததால் கண்டனங்கள் வலுத்தன. அதனையடுத்து அவர்கள் இரண்டு பேருக்கும் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் விஜய் சேதுபதி.

எதுவும் கிடைக்காது: ரெட் கார்டு பெற்ற பிறகு சான்ட்ராவிடம் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்கள். இந்த ரெட் கார்டை பெற்றுவிட்டதால் 90 நாட்கள் வீட்டுக்குள் இருந்ததற்கான சம்பளம், வழியனுப்புதல் வீடியோ, டாஸ்க்குகளில் பங்கேற்ற வெற்றி பெற்றதற்கான பலன்கள் என எதுவும் பாருவுக்கும், கம்ருதீனுக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்தியிருந்தால் இவ்வளவு இழப்புகளை அவர்கள் சந்தித்திருக்க வேண்டாம்.

Bigg Boss Tamil 9 Bigg Boss Slams Water Melon Star Diwakar Praising VJ Parvathi Inside the House
Photo Credit:

விஜே பாருவின் ரியாக்‌ஷன்: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த விஜே பார்வதி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ட்ரெய்ன் விட்டுக்கொண்டிருக்கிறார். அதாவது அவருக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் வந்த போஸ்ட்டுகள் ஒன்று விடாமல் ஸ்டோரியாக வைத்துவருகிறார். அதற்கும் பலர் நெகட்டிவ்வான கமெண்ட்ஸ்களையே பறக்க விடுகிறார்கள். கம்ருதீனை பொறுத்தவரை சைலெண்ட்டாக இருக்கிறார். இந்த தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்கு கண்டிப்பாக சில நாட்கள் ஆகலாம்.

அசிங்கப்படுத்திய பிக்பாஸ்: இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையவிருப்பதால்; இந்த சீசனில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களிடம் உரையாடுகிறார்கள். அப்படி வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் வந்தார். உள்ளே வந்த திவாகர், விஜே பார்வதியின் புகழை பாடுவதற்கு வாய் எடுத்தார். உடனே சுதாரித்த பிக்பாஸ், 'திவாகர் வெளியுலக விஷயங்களை பேசாதீர்கள். அதையும் மீறி பேசுவேன் என்று சொன்னால் மெயின் டோர் வழியாக வெளியே செல்லலாம்' என கூறிவிட்டார். அதற்கு வழக்கம்போல் வாட்டர் மெலன் தனது சாரியை தெரிவித்தார்.

பாருவுக்கு சப்போர்ட்: முன்னதாக திவாகரை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே விஜே பார்வதிக்கு ஆதரவான நிலைப்பாட்டினையே எடுத்துவருகிறார். தங்கை என்று உருகிய அவர்; ஒரே ஊர் என்பதாலும் பாசம் காட்டினார். பாரு ரெட் கார்டு வாங்கியது குறித்தும் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஜே பார்வதியை முதுகில் குத்திவிட்டார்க' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X