பிக்பாஸ் முடிந்தும் விஜே பார்வதி, கம்ருதீனை ஒதுக்கும் போட்டியாளர்கள்?.. ஒன்னு சேர்ந்தும் அவங்க இல்லையே பாஸ்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷும், முதல் ரன்னராக சபரி, இரண்டாவது ரன்னராக விக்கல்ஸ் விக்ரம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். திவ்யா வென்றது அனைவருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒன்றாக கோயிலுக்கு சென்றார்கள். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முதலில் சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமான போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியாக திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜின், பார்கவ் ஆகிய நான்கு பேரும் சென்றார்கள். வாரா வாரம் பலரும் எவிக்ட் ஆன சூழலில் பார்வதி, கம்ருதீன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், அரோரா உள்ளிட்டோர் டிக்கெட் ஃபினாலே டாஸ்க்கில் கலந்துகொண்டார்கள்.

எட்டி உதைத்த பாரு: அப்போது காரில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த சாண்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைக்க; அவருக்கு கம்ருதீனும் உதவி செய்தார். இரண்டு பேரால் தாக்கப்பட்ட சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக்கும் வந்தது. உடனடியாக மருத்துவர்கள் வந்து அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தார்கள். இதனையடுத்து விஜே பார்வதிக்கும், கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் டைட்டில் வெல்வார்கள் என கணிக்கப்பட்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.

Bigg Boss Tamil 9 Contestants Visit Temple Together After Divya Ganesh s Title Win Photos Go Viral
Photo Credit:

டைட்டில் வென்ற திவ்யா கணேஷ்: தொடர்ந்து கானா வினோத் பண பெட்டியுடன் வெளியேற; இறுதிக்கு திவ்யா, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரி ஆகியோர் சென்றார்கள். அவர்களில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராகவும், சபரிநாதன் முதல் ரன்னர் அப்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். திவ்யாவின் வெற்றி அனைவராலும் கொண்டாடப்பட்டது. முக்கியமாக டைட்டில் வின்னர் திவ்யா என அறிவிக்கப்பட்டதும் எந்த ஈகோவும் இல்லாமல் சபரி விசில் அடித்து கொண்டாடியது ரசிக்கும்படி இருந்தது.

என்ன காரணம்?: திவ்யாவின் இந்த வெற்றிக்கு அவரது செயல்பாடுகள்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தனது மனதில் பட்டதை பேசி; தன்னால் முடிந்த அளவு நேர்மையாகவே எல்லா விஷயங்களையும் அணுகினார். முக்கியமாக பார்வதி - சாண்ட்ரா - கம்ருதீன் விஷயத்தில் விஜே பாருவை விட்டு கிழித்துவிட்டார் திவ்யா. மேலும் கமருதீனுக்கும் ஒரு சகோதரி ஸ்தானத்தில் இருந்து அறிவுரையும் வழங்கினார். இவையெல்லாம்தான் மக்களிடையே திவ்யாவின் செல்வாக்கை உயர்த்திவிட்டதாக தெரிகிறது.

ஒன்றாக சென்ற போட்டியாளர்கள்: இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்திருக்கும் சூழலில் திவ்யா கணேஷ், கனி, அரோரா, துஷார், வியானா உள்ளிட்டோர் ஒன்றாக கோயிலுக்கு சென்றார்கள். அதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது. பெரும்பாலான போட்டியாளர்கள் ஒன்றாக சென்றிருக்கும் சூழலில் விஜே பார்வதியும், கம்ருதீனும் அவர்களுடன் செல்லவில்லை. இவர்கள் அவர்களை அழைக்கவில்லையா அல்லது அழைத்தும் அவர்கள் வரவில்லையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்; இன்னமும் அவர்களை சக போட்டியாளர்கள் ஒதுக்குகிறார்களோ எனவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X