வீணாய் போன பார்வதி.. அறிவு கெட்ட முண்டம் கம்ருதீன்.. பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் இந்த கிழி கிழிக்கிறாங்களே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது காரிலிருந்து சான்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கும், கம்ருதீனுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் அதிரடியாக அவர்கள் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட தாமரை செல்வி இரண்டு பேரையும் கிழி கிழியென்று கிழித்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடையவிருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதிகட்டமாக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடந்தது. இதில் சுபிக்ஷா, சான்ட்ரா, விஜே பார்வதி, திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், சபரிநாதன், கம்ருதீன், அரோரா ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதில் வென்று முதல் ஃபைனலிஸ்ட்டாக மாறியிருக்கிறார் அரோரா. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ன சம்பவம்?: அதாவது காருக்குள் இருந்த சான்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்தார். அதற்கு கம்ரூதினும் உதவி செய்தார். காரிலிருந்து கீழே விழுந்த சான்ட்ராவுக்கு வலிப்பு ஏற்பட; சக போட்டியாளர்கள் உதவி செய்தார்கள். மருத்துவ குழுவும் விரைந்து வந்து அவருக்கு வேண்டிய சிகிச்சையை அளித்தது. நல்வாய்ப்பாக பெரிய அளவில் அவருக்கு உடல்நல கோளாறு எதுவும் ஏற்படவில்லை. வன்மத்தோடு நடந்துகொண்ட இரண்டு பேரையும் சக போட்டியாளர்கள் விட்டு விளாசிவிட்டார்கள்.

வலுத்த கண்டனங்கள்: விஜே பாரு மற்றும் கம்ருதீன் செய்த இந்த அராஜகத்தை கண்டு பிக்பாஸ் ரசிகர்களும் கொந்தளித்தார்கள். இரண்டு பேரும் இப்படி விஷத்தன்மையோடு இருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை; வெற்றிக்காக எந்த எல்லைக்கும் சென்று அராஜகம் செய்வார்கள் போல என கண்டித்தார்கள். மேலும் இவர்களுக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும்; இல்லையென்றால் விஜய் சேதுபதி மீது இருக்கும் மதிப்பும் போய்விடும் என கோரிக்கை வைத்தார்கள்.
ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி: சூழல் இப்படி இருக்க அராஜகமாக நடந்துகொண்ட இரண்டு பேருக்கும் விஜய் சேதுபதி அதிரடியாக ரெட் கார்டு கொடுத்தார். ரெட் கார்டு பெற்ற பிறகு சான்ட்ரா காலில் கம்ருதீன் விழ; சான்ட்ராவிடம், 'என் வாழ்க்கையில் மறக்க முடியாத தவறை செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என பாரு பேச; இந்த நாடகத்தையெல்லாம் வீட்டுக்கு வெளியே சென்று வைத்துக்கொள்ளுங்கள் என்கிற ரீதியில் ஹவுஸ் மேட்ஸ் ரியாக்ஷனை கொடுத்தார்கள்.
கிழித்த தாமரை செல்வி: இரண்டு பேரும் வெளியேற்றப்பட்டதை பார்த்து ரசிகர்களும் நிம்மதியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிகபாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட தாமரை செல்வி இந்த விவகாரம் பற்றி கோபத்தோடு வீடியோ வெளியிட்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "நேற்று நடந்த எபிசோடை இன்றுதான் பார்த்தேன். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னுடைய ஆதங்கம் உண்மையில் தாங்கவே முடியவில்லை. வீணாய் போன பாருவும், வீணாய் போன கம்ருதீனும் செம காண்டாக்கிட்டாங்க.
நீயும் பெண்தானே: உண்மையில் நீ வீணாய் போன காமுதான்டா நீ. அவ்வளவு கோபம். என்னை மட்டும் உள்ளே அனுப்பினார்கள் என்றால் இரண்டு பேரையும் தரதரவென்று இழுத்து வந்துவிடுவேன். அப்படி பிடித்து தள்ளிவிடுற. நீயும் ஒரு பெண்தானே. எவ்வளவு அக்கிரமம் செய்கிறாய் நீ. எங்கள் சீசனிலும்தான் லவ் செய்தார்கள். உங்களை மாதிரி கன்றாவியா செஞ்சாங்க. பைத்தியம் மாதிரி இருக்கீங்க. அறிவு கெட்ட முண்டம். நீ முண்ட பயல்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











