Bigg Boss: கம் பேக் கொடுத்த ஆதிரை.. ஷாக் ஆன வியானா & FJ.. அடடே பிக்பாஸ் தூள் கிளப்புதே!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9, 50 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது, இந்த வாரத்துடன் சேர்த்து, மொத்தம் 8 வாரங்கள் நிறைவு பெற்றுள்ளது. வழக்கமாக, வார இறுதியில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால் இந்த வாரத்தில் எலிமினேட் மட்டும் இல்லாமல், ஒரு சப்ரைஸ் என்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்கனவே போட்டியாளராக இருந்து, மூன்றாவது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட, ஆதிரை மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து ஹவுஸ் மேட்ஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டும் இல்லாமல், வியானா & FJ-வை டரியல் ஆக்கி உள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் மூன்றாவது வாரத்தில் வெளியேறிய போட்டியாளர் என்றால் அது, ஆதிரை. இவரது முதல் வார ஆட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கூர்மையான கேள்விகள், தெளிவான பேச்சுக்களால் ரசிகர்களை ஈர்த்தார். இப்படி இருக்கும்போது, இரண்டாவது வாரம் மற்றும் அவர் வெளியேறிய மூன்றாவது வாரத்தில் ஆதிரையின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், சக போட்டியாளர் FJ- உடன் இணைந்து கொண்டு, லவ் கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் கடுப்பு ஏற்றிக் கொண்டு இருந்தார்.

Bigg Boss Tamil 9 Evicted Contestant Aadhirai Comeback Contestant FJ And Viyana Getting Shock

இது மட்டும் இல்லாமல் அவரது ஆட்டத்தில் அவர் கவனமே செலுத்தாமல் இருந்ததும், சில நடவடிக்கைகளும் அவரை எலிமினேட் செய்ய காரணங்களாக இருக்கும் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்படி இருக்கும்போது ஆட்டம் 56 நாட்களைக் கடந்த பின்னர், ஆதிரை மீண்டும் ஆட்டத்தில் கலந்து கொண்டுள்ளது என்பது ரசிகர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் தான்.


அதிர்ச்சி: ஆனால், போட்டியாளர்களை பொறுத்தவரையில், ஆதிரையின் வருகை கொஞ்சம் இன்ப அதிர்ச்சி தான். ஆனால் ஆதிரையை மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளார்கள். ஆனால் ஆதிரையின் வருகையைப் பார்த்ததும் வியானா மற்றும் FJ-வின் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. அதுவும் வியானா கடந்த இரண்டு வாரங்களாக வியானாவும் FJ-வும் இணைந்து கொண்டு லவ் கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பு ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆதிரை: இதில் இருவரது ஆட்டத்தின் மதிப்பை பூஜ்யமாக மாற்றி உள்ளது. இப்படி இருக்கும்போது ஆதிரை கம்பேக் கொடுத்திருப்பது வியானா மற்றும் FJ-வை டரியல் ஆக்கி உள்ளது. இது தொடர்பான புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் தரப்பில் செய்யப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X