Bigg Boss Tamil - பிக்பாஸில் ஒருநாள்.. டங்குவாரே அறுந்து போயிடும்.. அகோரி கலையரசன் ரொம்ப பட்டுட்டாரோ

சென்னை: பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏற்கனவே களமிறங்கிய 20 போட்டியாளர்களால் தினமும் ஒரு பஞ்சாயத்து வந்துகொண்டிருந்த சூழலில் இப்போது புதிதாக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நான்கு போட்டியாளர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். அவர்களும் தங்கள் பங்குக்கு ஓவர் அட்ராசிட்டியையே கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் போட்டியிலிருந்து வெளியேறிய அகோரி கலையரசன் பிக்பாஸ் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் 9ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. பொதுவாக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களை அதிகம் களமிறக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த முறை சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களை இறக்கியிருந்தார்கள். போட்டியாளர்களும் முதல் நாளிலிருந்தே சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள் என்று பார்த்தார்கள் தினமும் ஒரு சண்டையோடு நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறிய போட்டியாளர்கள்: முதலிலி நந்தினி இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை என்று சொல்லி தானாகவே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்த் எவிக்ட் செய்யப்பட்டார். இவர்கள் இரண்டு பேரை தொடர்ந்து அப்சரா, அகோரி கலையரசன், ஆதிரை உள்ளிட்டோர் வெளியே வந்துவிட்டார்கள். இந்த வாரம் பிரவீனும், ரம்யா ஜோவும் எவிக்ட் ஆவது உறுதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss Tamil 9 Evicted Contestant Agori Kalaiyarasan Exposes Inside Chaos
Photo Credit:

வலுக்கும் கண்டனம்: ஆனால் பிரவீன் எவிக்ட் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் சோஷியல் மீடியாக்களில் கிளம்பியிருக்கின்றன. அவர் முதல் நாளிலிருந்தே ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருக்கிறார்; அவரது ஸ்ட்ரேட்டஜி எல்லாமே சூப்பராக இருக்கின்றன. ஆனாலும் அவர் வெளியேற்றப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அரசியல் இருக்கிறது என்பதை உறுதி செய்திருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.

வைல்டு கார்டு என்ட்ரி: இதற்கிடையே முதலில் வீட்டுக்குள் வந்த 20 போட்டியாளர்களால் நிகழ்ச்சி குழுவுக்கே பெரிய தலை வலி வந்துவிட்டது. அவர்கள் ஆளாளுக்கு தங்கள் இஷ்டத்துக்கு பேசிக்கொள்கிறார்கள்; நடந்துகொள்கிறார்கள். சமயங்களில் அது அத்துமீறிய செயல்களாகவும், ஆபாச பேச்சாகவும் இருக்கின்றன. எனவே இந்த சீசனுக்கு பலரும் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். விஜய் சேதுபதியும் தன்னால் முடிந்த அளவு கன்ட்ரோல் செய்ய பார்த்தார் முடியவில்லை. சரி புது போட்டியாளர்களை உள்ளே கொண்டுவந்தால் நிலைமை சரியாகும் என வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், திவ்யா, சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகியோர் உள்ளே வந்தார்கள்.

அவர்களும் இப்படித்தான்: அவர்கள் வந்த பிறகு நிலைமை சீர் ஆகும் என்று பார்த்தால் அவர்களும் தங்கள் பங்குக்கு அலப்பறையை கூட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக இன்று விஜய் சேதுபதி என்ன மாதிரி நடந்துகொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் பற்றி அகோரி கலையரசன் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அகோரி கலையரசன் பேட்டி: தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் எவிக்ட் ஆன வாரத்தில் அரோரா, கம்ருதீன், வினோத் ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டதால்தான் நான் வெளியே வந்தேன். பிக்பாஸுக்கு வந்தால் அது கொடுப்பார்கள் இது கொடுப்பார்கள் என்றும், அது ஸ்க்ரிப்ட்டட் என்பதும் கிடையாது. அந்த நிகழ்ச்சியில் ஒரு நாளை கடப்பது யுகத்தை கடப்பது போன்று இருக்கும் . டங்குவாரு அறுந்துபோயிடும். அந்த வீடே ஒரு புதிரானது. எந்த புற்றிலிருந்து எந்த பாம்பு வரும் என்று தெரியாது" என்றார்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X