BB: ஜோடியா வெளியே போங்க பாரு & கமருதீன்! சபாஷ் சேதுபதி.. மக்கள் மனதை புரிந்து கொண்ட மக்கள் செல்வன்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இன்று அதாவது ஜனவரி 3ஆம் தேதி வீக் எண்ட் எபிசோடில், இந்த சீசன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார். இது தொடர்பாக இன்றைய இரண்டாவது புரோமோவில் விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுப்பதைக் காட்டுகிறார்கள். இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கவும் செய்தனர்.
இந்த புரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகிறார்கள். இந்த புரோமோவில், " கமருதீனைப் பார்த்து, " நீங்க இப்படி பேசி இருக்கீர்களே. அது பார்ப்பவர்களுக்கு கடுமையாக இருக்காதா? உங்க அக்கா இதைப் பார்த்தால் தம்பி நீ நல்லா பண்ணப்பா என்று சொல்லுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல் பார்வதியைப் பார்த்து, " பாரு வீட்டுக்குப் போனதும் பாராட்டு விழா தான் நடத்துவார்கள். ஒரு பொண்ணை எட்டி உதைத்து வெளியே தள்ளிய உனது கோபத்தை நான் பாராட்டுகிறேன் என்று அவரது அம்மா சொல்லுவார்கள். அம்மா பாராட்டுவார்கள், அக்கா பாராட்டுவார்கள் ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும் என கூறி இரண்டு ரெட் கார்டுகளைக் கொடுத்து வெளியே அனுப்புகிறார்.
விஜய் சேதுபதியின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மக்கள் மனதை புரிந்து கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்று பாராட்டி வருகிறார்கள். மேலும் பலர், இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருவதை இப்போதுதான் பார்க்கிறேன் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

குடும்பங்கள் கொண்டாடும் எவிக்ஷன்: ஒரு சில ரசிகர்களோ குடும்பங்கள் கொண்டாடும் ரெட் கார்டு எவிக்ஷன் என்று பதிவிட்டு வருகிறார்கள். போன வாரம் கனி திருவை பார்த்து பார்வதி சிரித்தார். ஆனால் இந்த வாரம் ஊரே பார்வதியைப் பார்த்து சிரிக்கிறது என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பலர் நீதி நிலைநாட்டப்பட்டது. விஜய் சேதுபதி மீது மரியாதை கூடுகிறது என்று பதிவிட்டு வருகிறார்கள். நேற்று இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதில் இருந்து பிக்பாஸ் கமருதீன் மற்றும் பார்வதியிடம் எதுவுமே பேசவில்லை. அவர்கள் இருவரும் டாஸ்க்கில் அவுட் ஆனதை மட்டும் அறிவித்தார். மற்றபடி அவர்கள் இருவரிடத்திலும் பேசவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட சான்ட்ராவை அழைத்து, பயப்பட வேண்டாம், எனது உருவத்தில் சபரி, விக்ரம், கானா வினோத் என மூவர் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











