பார்வதியுடன் ஓவர் நெருக்கம்.. வியானாவிடம் துண்டு போட்டு வைத்த கமருதீன்.. யாரு சாமி நீ என ரசிகர்கள் ஷாக்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டு எவிக்ஷன்களில் ஒரு எவிக்ஷன் வியானா. வியானா வெளியேறுவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெருமளவு கவன குவியல் இல்லை என்றாலும் அவரது கடந்த சில வார கால ஆட்டம் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆதிரை மீண்டும் உள்ளே சென்ற பின்னர், வியான போட்டியாளர் FJ விடம் இருந்து தள்ளித்தான் இருந்தாரே தவிர ஆட்டத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தினாரா என்பது கேள்விக்குறி. இப்படி இருக்கையில் அவர் இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வெளியேறினார்.
வெளியேறிய பின்னர் வியானா போட்டியாளர் கமருதீனைப் பார்த்து பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தில் வேகமாக உலா வந்து கொண்டு உள்ளது. அதாவது, " கமருதீன் ஒவ்வொரு நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்னிடம் வந்து, என்னை மனதில் வைத்துக் கொள். நான் வெளியே வந்து உனது அம்மாவிடம் பேசுகிறேன். நீ ஏன் என்னிடம் முதலிலேயே பேசவில்லை? நீ மட்டும் முதல் நாளில் இருந்தே பேசியிருந்தால் எனக்கு இந்த இரண்டு தொல்லைகள் இருந்திருக்காது என்று எல்லாம் கூறினார்.
குக்கருடன் அம்மா: இங்கு நீ என்னை எப்படியாக வேண்டுமானாலும் வைத்துக் கொள், ஆனால் வெளியே வந்து நான் பேசுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என்று தெரிவித்தார். மேலும் வெளியே வாங்க கமருதீன் எனது அம்மா குக்கருடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

ஷாக் ஆன விஜய் சேதுபதி: இதைக் கேட்ட விஜய் சேதுபதி, இது பார்வதிக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். இல்லை என்று வியானா பதில் அளிக்க, கமருதினோ பார்வதிக்கு எல்லாம் தெரியும் என்று பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்களோ யாரு சாமி நீ, இத்தனை கேமரா இருக்கும் இடத்தில் இப்படியான வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.
பார்வதி: அதேபோல் பார்வதியிடம் பேசும்போது, பார்வதி நீ அங்கு இருந்து கொண்டு எல்லார் மூளைக்குள்ளும் ஏதோ ஒன்றை குடைந்து கொண்டே இருக்கிறாய். நான் அதில் கொஞ்சம் கவனத்தை சிதற விட்டு விட்டேன். அதனால் தான் இன்றைக்கு எவிக்ட் ஆகி வெளியே நிற்கிறேன் என்று தெரிவித்தார். இப்படி இருக்கும்போது அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வியானா வெளியேறியது போட்டியாளர்கள் சிலருக்கு மிகவும் கவலை அளித்துள்ளது. மேலும், ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











