எந்த ஊர்ல அக்காக்கு கழுத்துல கிஸ் அடிப்பாங்க?.. கனிக்கு முத்தம் கொடுத்த FJ.. கிழிக்கும் ரசிகர்கள்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த சீசன்களிலேயே இந்த சீசன்தான் ரொம்பவே ஒழுங்கீனமான போட்டியாளர்கள் கலந்துகொண்ட சீசன் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இதை பிக்பாஸேகூட போட்டியாளர்களிடம் ஓபனாக சொல்லிவிட்டாலும்; அவர்கள் இன்னமும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் எஃப்ஜேவை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிவருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் நடந்துவருகிறது. ஆனால் போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸுக்கு கிடைத்துவரும் ஆதரவுகளை இந்த சீசன் போட்டியாளர்களே முடித்து வைத்துவிடுவார்கள்போல. அந்த அளவுக்கு வீட்டுக்குள் அவர்களது அட்ராசிட்டி எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது.

கண்டிக்கும் சேதுபதி: வாரம் முழுவதும் அவர்கள் செய்யும் மோசமான செயல்களை வார இறுதியில் வரும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி கடுமையாக கண்டிக்கவே செய்கிறார். ஆனால் அவர் கண்டிக்கும்போது பள்ளி குழந்தைகள் போல தலையாட்டி கேட்டுக்கொள்ளும் போட்டியாளர்கள் அவர் சென்ற பிறகு மீண்டும் பழையபடியே நடந்துகொள்கிறார்கள். இது ரசிகர்களிடையே கடும் கண்டனங்களை சந்தித்துவருகிறது.

Bigg Boss Tamil 9 FJ Slammed for Inappropriate Kiss on Kani s Neck
Photo Credit:

பிரஜினின் அட்டகாசம்: வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த பிரஜின் விக்கல்ஸ் விக்ரம் உள்ளிட்ட சக போட்டியாளர்களிடம் பேசிய விதம் ரொம்பவே கண்டிப்புக்குரியதாக இருந்தது. இதனை சேதுபதியும் சென்ற வாரத்தில் கண்டித்தார். இது ஒருபக்கம் இருக்க கெமியும், பிரஜினும் காரில் சென்றபோது பிரஜினின் மனைவி சான்ட்ரா அழுது புரண்டது பார்ப்பதற்கு காமெடியாக இருந்தது மட்டுமின்றி இரிட்டேட்டாகவும் இருந்ததாகவும் ரசிகர்கள் ஓபனாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

எஃப்ஜேயின் அத்துமீறல்: இந்நிலையில் எஃப்ஜேவை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது தனது அருகில் அமர்ந்திருக்கும் கனியை கட்டிப்பிடித்து கழுத்தில் முத்தம் கொடுத்தார் எஃப்ஜே. கனியை வீட்டில் இருக்கும் அனைவருமே (எஃப்ஜேவும்) அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இவர் கழுத்தில் முத்தம் கொடுத்ததை பார்த்து, 'எந்த ஊரில் அக்காவுக்கு கழுத்தில் முத்தம் கொடுப்பார்கள். இதையெல்லாம் எப்போதுதான் நிறுத்தப்போகிறார்களோ' என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்ஸையும் மீம்ஸையும் பறக்கவிடுகின்றார்கள்.

எவிக்‌ஷன் லிஸ்ட்: பிக்பாஸ் 9ல் எவிக்‌ஷன் லிஸ்ட்டை பொறுத்தவரை இதுவரை, 'கெமி, திவாகர், பிரவீன், துஷார், கலையரசன், ஆதிரை, அப்சரா, பிரவீன் காந்தி' உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். நந்தினி தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kani கனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X