Bigg Boss: ரஜினி & விஜய் பாடலுக்கு ஆட்டம்.. கானா வினோத்திற்கு லவ்லி வரவேற்பு கொடுத்த மனைவி பாக்கியா

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் டைட்டில் வின்னராக கானா வினோத் தான் வருவார், கானா வினோத் தான் வரவேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி பாக்கியா, நண்பர்களான சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் அவருக்காக வாக்கு சேகரித்து வந்தனர். அப்படி இருக்கும்போது கானா வினோத் கடந்த வாரத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். பிக்பாஸ் விதிப்படி கானா வினோத் கடந்த வாரத்தின் வீக் எண்ட் எபிசோட் படமாக்கப்படும் வரை, தனியாக இருந்தார். அதன் பின்னர் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றுள்ளார் அவரது மனைவி பாக்கியா. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கானா வினோத் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். அவரது டைமிங் காமெடிகள், தனித்துவமான விளையாட்டு, நட்புக்காக உண்மையாக இருத்தல் என மொத்தமாகவே அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்து சக போட்டியாளர்களை விமர்சிக்கும்போது, கானா வினோத் தனது ஆட்டம் குறித்து ஃபயர் விடும் அளவுக்கு பேசி பறக்கவிட்டார்.

Bigg Boss Tamil 9 Gana Vinoth Wife Bakya Gives So Many Surprise Welcoming - Watch
Photo Credit:

அதேபோல் கமருதீன் பார்வதி இணைந்து சாண்ட்ராவை காரில் இருந்து உதைத்து தள்ளிய போது, சாண்ட்ராவுக்கு உதவி செய்தார். அதேபோல், கமருதீன் செய்தது தவறு என்று வாக்குவாதம் செய்யவும் செய்தார். அதேபோல் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய போது, அழுது கொண்டே வழி அனுப்பி வைத்தார். இவரது இந்த மனம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.

இப்படி இருக்கையில் ரூபாய் 18 லட்சத்துடன் தனது பிக்பாஸ் பயணத்தை நிறைவு செய்து கொண்டார் கானா வினோத். சனிக்கிழமை எபிசோட் முடிந்து வீட்டிற்கு வந்தவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், அவருக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி உள்ளார் அவரது மனைவி பாக்கியா. குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான மனசுலாயோ பாடலைப் போட்டு ஆட்டம் போட்டு வரவேற்றுள்ளார். மேலும் திரையரங்கம் ஒன்றை தனியாக வாடகைகு எடுத்து சிவகாசி படத்தில் விஜயின் பாடலான கோடம்பாக்கம் ஏரியா பாடலை போட்டும் நடனமாடி சர்ப்ரைஸ் வெல்கமிங் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Bigg Boss Tamil 9 Gana Vinoth Wife Bakya Gives So Many Surprise Welcoming - Watch
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X