வாழ்க்கை முழுக்க வேண்டும்.. விஜே பார்வதியுடனான பழக்கம் பற்றி மனம் திறந்த பிக்பாஸ் கம்ருதீன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் ஒரே நேரத்தில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள். அந்த நிகழ்ச்சி வரலாற்றி இப்படி இரண்டு ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கம்ருதீன்; விஜே பார்வதியுடனான பழக்கம் பற்றி மனம் திறந்து பேசினார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நடந்து முடிந்துவிட்டது. இதில் திவ்யா கணேஷ் டைட்டிலை வெல்ல; சபரிநாதன் முதல் ரன்னர் அப்பாகவும், விக்கல்ஸ் விக்ரம் இரண்டாவது ரன்னராகவும் வந்தார்கள். இவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தாலும்; இந்த சீசனின் ஹைலைட்டாக இருந்தது என்றால் அது விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். இரண்டு பேரும் ஆரம்பத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்து பின் நாட்களில் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.

ஒருவருக்கொருவர் துணை: இரண்டு பேரில் யாருக்கு ஏதேனும் ஒரு பிரச்னை என்றாலும் இன்னொருவர் துணைக்கு வந்து நின்றுவிடுவார். தங்களுக்குள் இருந்த உறவை, More Than Friendship என்று அவர்கள் விளித்தார்கள். அந்த உறவில் இரண்டு பேரும் இரட்டை அர்த்த வசனங்களில் பேசிக்கொண்டதை எல்லாம் காது கொடுத்தே கேட்க முடியவில்லை என்றுதான் பலரும் சொன்னார்கள். இருந்தாலும் 90 நாட்கள் வரை பிக்பாஸில் டஃப் போட்டியாளர்களாக திகழ்ந்தார்கள்.

Bigg Boss Tamil 9 Kamruddin Opens Up About His Relationship With VJ Parvathy
Photo Credit:

இரண்டு பேருக்குமே ரெட் கார்டு: கண்டிப்பாக இவர்களில் ஒருவர் டைட்டிலை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் வெளியாகின. ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக; டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதி எட்டி உதைத்ததாலும், அவருக்கு கம்ருதீன் உதவி செய்ததாலும்; இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக நிகழ்ச்சி குழுவினர் வெளியேற்றிவிட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டது பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது.

மன்னிப்பு கேட்ட கம்ருதீன்: ரெட் கார்டு பெற்றதும் இரண்டு பேருமே சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். குறிப்பாக கம்ருதீன் சாண்ட்ராவின் காலில் விழுந்தே மன்னிப்பு கேட்டுவிட்டார். வீட்டை விட்டு அவர் வெளியே போகும்போது கண்கள் கலங்கியபடி சென்றார். அதை பார்த்த அவரது ஆதரவாளர்கள், கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு கம்ருதீன் உதாரணமாகிவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அவர்.

பார்வதி பற்றி கம்ருதீன்: அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், "வாழ்க்கை முழுக்க இவர்கள் வேண்டும் என்கிற ரீதியில்தான் கானா வினோத், விஜே பார்வதியிடம் பழகினேன். பார்வதி கொஞ்சம் ரக்கடான பெண்தான். ஆனாலும் அவருக்குள்ளும் ஒரு நல்ல பக்கம் இருக்கிறது. அந்த நல்ல பக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நான் விளையாட்டு என்பதையே மறந்துவிட்டு வாழவே ஆரம்பித்துவிட்டேன். சாண்ட்ராவுடனான அந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு ரெட் கார்டு கொடுத்துவிடுவார்களோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X