பிக்பாஸில் ரெட் கார்டு பெற்ற கம்ருதீன் இவ்வளவு நல்லவரா இருக்காரே.. நெகிழும்படி வீடியோ விட்டிருக்காரு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நடந்து முடிந்துவிட்டது. இதில் திவ்யா கணேஷ் டைட்டிலை வென்றுவிட்டார். ஆனால் விஜே பார்வதி அல்லது கம்ருதீன் ஆகியோரில் ஒருவர்தான் இந்த சீசன் டைட்டிலை அடிப்பார்கள் என கணிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அந்த இரண்டு பேருமே ரெட் கார்டு பெற்று வெளியேறிவிட்டார்கள். இந்நிலையில் கம்ருதீனின் செயல் ஒன்று அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த முறை திரை பிரபலங்கள், சீரியல் பிரபங்களை குறைத்துவிட்டு சோஷியல் மீடியா மூல்ம் பிரபலமானவர்கள் அதிகம் பேரை வீட்டுக்குள் அனுப்பியிருந்தார்கள். அதனையடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோரும் சென்றார்கள். அனைவரும் சேர்ந்து இந்த சீசனை முடிந்த அளவு சுவாரஸ்யமாகவே கொண்டு சென்றார்கள்.

கம்ருதீன், விஜே பார்வதி: இந்த சீசனின் ஹைலைட்டாக இருந்தவர்கள் என்றால் கம்ருதீனும், விஜே பார்வதியும்தான். இவர்கள் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தபடி இருந்தார்கள். ஆரம்பத்தில் எதிர் துருவங்களாக இருந்த அவர்கள்; சில வாரங்களில் நெருக்கமாகி நட்பை தாண்டிய ரிலேஷன்ஷிப்பில் சென்றார்கள். இரண்டு பேரும் சேர்ந்துகொண்டு டபுள் மீனிங்கில் பேசுவது என அலப்பறையை பிக்பாஸ் வீட்டுக்குள் கூட்டியபடிதான் இருந்தார்கள்.

Bigg Boss Tamil 9 Kamruddin Wins Hearts With Emotional Video After Red Card Exit
Photo Credit:

கணிக்கப்பட்டார்கள்; ஆனால் ட்விஸ்ட்: அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும்போது கண்டிப்பாக இவர்களில் ஒருவர்தான் பிக்பாஸ் சீசன் 9 டைட்டிலை அடித்து செல்வார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் தாரக மந்திரம் இவர்களது விஷயத்தில் நடந்துவிட்டது. அதாவது டாஸ் ஒன்றில் சாண்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்தார். அவருக்கு கம்ருதீனும் உதவி செய்து ஆதரவளித்தார். இதனால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்கள்.

டைட்டில் வென்ற திவ்யா கணேஷ்: பிக்பாஸ் வரலாற்றில் இரண்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் ரெட் கார்டு வாங்குவது இதுதான் முதன்முறை. டைட்டில் வெல்வார்கள் என கணிக்கப்பட்டிருந்தவர்கள் ரெட் கார்டு பெற்றது அவர்களது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்தது. தொடர்ந்து நடந்த சீசனில் திவ்யா கணேஷ் டைட்டிலை அடித்து சென்றார். சபரிநாதன் ரன்னர் அப்பாகவும், விக்கல்ஸ் விக்ரம் இரண்டாவது ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்க்ள். அரோரா நான்காவது இடத்தை பிடித்தார்.

கம்ருதீனின் வீடியோ: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு விஜே பாருவும், கம்ருதீனும் வந்திருந்தார்கள். அவர்களது நடத்தையில் ஏகப்பட்ட பக்குவங்கள் தெரிந்ததாக பலரும் சொன்னார்கள். இந்நிலையில் கம்ருதீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது 23 மாத குழந்தை ஒன்று உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த குழந்தையை கைகளில் வைத்தபடி இக்குழந்தைக்கு எல்லோரும் உதவுங்கள். நானும் உதவியிருக்கிறேன் என கூறுகிறார். இதை பார்த்த பலரும், இவ்வளவு நல்லவரா இருக்காரு. பாருவோடு சேர்ந்து ஆட்டம் போடாமல் இருந்திருந்தால் இவரது நிலைமையே வேறு என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X