Bigg Boss Tamil 9 - சாண்ட்ராவை எட்டி உதைத்த பார்வதி.. ராட்சசியாவே மாறிட்டாங்களே..கம்ருதீன் சப்போர்ட் வேற
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் 90 நாட்களை நெருங்கியிருக்கிறது. போட்டியில் பங்கேற்ற பலர் எவிக்ட் ஆகியிருக்கும் நிலையில் விஜே பார்வதி, கம்ரூதின், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, சுபிக்ஷா, சபரி, அரோரா உள்ளிட்டோர் இப்போது போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜே பார்வதி சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்தவருகிறது. இதில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் 15 பேர் இதுவரை எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஒன்பது பேரும் இறுதிக்கு சென்று எப்படியாவது டைட்டிலை அடித்துவிட வேண்டும் மும்முரமாக விளையாண்டுவருகிறார்கள். இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி நெருங்கியிருப்பதால் ஒவ்வொரு நாளும் புது புது கன்டெண்ட்டுகளை போட்டியாளர்கள் கொடுக்கிறார்கள்.
விஜே பார்வதி: இந்த சீசனில் பலரது கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவராக விஜே பார்வதி மாறியிருக்கிறார். போட்டி ஆரம்பித்த சமயத்தில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அண்ணன் அண்ணன் என்று சொல்லி நெருக்கமாக இருந்தார். அதுமட்டுமின்றி சக போட்டியாளர்கள் பலரிடம் அவர் நடந்துகொள்ளும் விதமும் ரசிகர்களிடம் பெரிய விமர்சனத்தை பெற்றுவருகின்றன. ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.

கம்ரூதினுடன் நெருக்கம்: முக்கியமாக சபரிநாதனுக்கும் பார்வதிக்கும் இடையே சுத்தமாக செட் ஆகாமல் இருந்தது. அந்த லிஸ்ட்டில்தான் கம்ருதீனும் இருந்தார். ஆனால் பார்வதிக்கும், கம்ருதீனுக்கும் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை; சமீபமாக ஓவர் நெருக்கம் காட்டிவருகிறார்கள். இரண்டு பேரும் காதலர்கள் போல் நடந்துகொள்கிறார்கள் என்பது ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக இருப்பது கவனிக்கத்தக்கது. பார்வதிக்கு ஒன்று என்றால் கம்ருதீன் உடனே சப்போர்ட்டுக்கும் வந்துவிடுகிறார்.
ஹாட்டாக மாறவா?: புத்தாண்டு அன்றுகூட சுடிதார் அணிந்திருந்த பார்வதியை பார்த்து, நீ ரொம்ப ஹோம்லியா இருக்க என கம்ருதீன் சொல்ல; பாருவோ ஹாட்டாக மாறிடவா என முகம் சுளிக்கும்படி பேசினார். அது ரசிகர்களிடையே கடும் கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி தனியாக ஒரு அறைக்குள் அவர்கள் இரண்டு பேரும் செல்வதையும் கண்டிக்க தவறவில்லை மக்கள். இந்நிலையில் பார்வதியின் தனது க்ரைம் ரேட்டை கூட்டும்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.
என்ன ஆனது?: அதாவது இறுதிச்சுற்றுக்கு செல்லும் TTF டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் காருக்குள் அமர்ந்திருந்த சாண்ட்ராவை பார்வதி எட்டி உதைத்தார். அதன் காரணமாக கீழே விழுந்த சாண்ட்ரா மயங்கிவிட்டார். இதை பார்த்து பதறிய சக போட்டியாளர்களான விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கானா வினோத் ஆகியோர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஆனாலும் அவருக்கு சரியாகவில்லை.
உடனடியாக மருத்துவ குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்தது. பார்வதி எட்டி உதைத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா கணேஷும் தன் பங்குக்கு பாருவையும், கம்ருதீனையும் கண்டித்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்டாக மதிக்காமல் தான் செய்ததுதான் சரி என்று வாதிட்டார் பாரு. மேலும் பார்வதிக்கு கம்ரூதின் சப்போர்ட்டும் செய்தார். இந்த சம்பவங்களை பார்த்த ரசிகர்கள், 'விஜே பாருவை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இவ்வளவு ராட்சசியா இருக்காங்களே' என்று விளாச தொடங்கியிருக்கிறார்கள். முன்னதாக இந்த டாஸ்க்கில் வென்று அரோரா இறுதிச்சுற்றுக்கு சென்றார்.


Click it and Unblock the Notifications











