கமருதீன் மேல வழக்கு உறுதி.. சான்ட்ராவை விமர்சித்தவர்களுக்கு பிரஜின் மிரட்டல்.. இணையவாசிகள் பதிலடி

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த வாரத்தில் பணப்பெட்டி வாரமாக உள்ளது. இந்த சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளரான சான்ட்ராவின் கணவர் பிரஜின் அண்மையில் அளித்த பேட்டியில், கமருதீன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், சான்ட்ராவை மோசமாக விமர்சித்தவர்கள், இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று பேட்டி ஒன்றில் எச்சரித்தார்.

பிரஜின் இவ்வாறு பேசியது பலருக்கும் ஷாக் கொடுத்தது. அதாவது பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் இதற்கு முந்தைய சீசனிலும் சரி, தற்போதைய சீசனிலும் சரி போட்டியாளர்கள் மீது விமர்சனங்கள் அதிகமானால் அவர்களுக்கு ஏதாவது பட்டப்பெயர் வைப்பது என்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. அப்படி இருக்கையில் இந்த சீசனில் பலருக்கும் பல பெயர்கள் ரசிகர்களால் சூட்டப்பட்டது.

அப்படித்தான் சான்ட்ராவுக்கும் பட்டப் பெயர் சூட்டப்பட்டது. இப்படி இருக்கையில் பிரஜின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளத்தில் சான்ட்ராவை விமர்ப்பதை நிறுத்தாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதற்கு இணைய வாசி ஒருவர் நீண்ட பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Bigg Boss Tamil 9 Prajan Threatening To Who Criticize Sandra Amy And Ready to File Case Against Kamruddin
Photo Credit:

அதாவது, " என்ன பிரஜின், மிரட்டலா? ஆமாம், நீ, உன் மனைவி நடிப்பு அரக்கி சான்ட்ரா, உன் மச்சான் விஜய் சேதுபதி மற்றும் விஜய் டிவி குழுவினர் சேர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் 'Scam' தான் பண்றீங்க. அதில் சந்தேகமே வேண்டாம்.மத்தவங்க மேல நீ கேஸ் கொடுக்கிறது இருக்கட்டும். உன் மனைவி செய்த இவற்றுக்கு என்ன பதில்?

*உற்ற தோழியாக இருந்த #DivyaGanesh-ஐ, உன்னை வைத்தே Character Assassination' செய்து இழிவு படுத்தியது,

* சுபிக்‌ஷா-வை உடல் ரீதியாகத் தாக்கி கீழே தள்ளியது; அவருக்கு 'Deworming tablet' கொடுக்க வேண்டும் என்று சொன்னது,

* கனிதிரு மீது குழந்தைகளை முன்வைத்து வீணான பழிகளைச் சுமத்தியதோடு, அவரை வயது மற்றும் உருவக் கேலி செய்தது,

* FJ மற்றும் கனிதிரு ஆகியோரின் புனிதமான அக்கா-தம்பி உறவைக் கொச்சைப்படுத்தியது,

* அரோரா மீது 'Character Assassination' செய்தது,

* சக போட்டியாளர்களை "கிழவி", "நாய்க்குட்டி", "பால்காரி", "கடல்கன்னி" என உருவக் கேலி செய்தது மற்றும் ஒருவரை "நாய்க்கு" சமமாக பேசியது போன்ற கடுமையான விமர்சனங்கள் இது போன்ற எண்ணற்ற Harassment cases உங்கள் மனைவி மீது வரிசையாக இருக்கின்றன.

அதுமட்டுமல்ல:
Mother card,
Delulu card,
Humanity card,
Couple card,
Corner card,
Periods card,
Language card,
Poverty card,
Bayam card,
Children card
என உங்கள் மனைவி எடுக்காத 'விக்டிம் கார்டுகளே இல்லை.

Bigg Boss Tamil 9 Prajan Threatening To Who Criticize Sandra Amy And Ready to File Case Against Kamruddin
Photo Credit:

ஆனால் உங்கள் மச்சான் விஜய் சேதுபதி, இவற்றைப் பற்றி எந்தக் கடுமையான கேள்விகளையும் எழுப்பாமல் உங்கள் மனைவிக்கு ஆறுதல் சொல்வதிலேயே குறியாக இருந்தார். இதையெல்லாம் 'ஸ்கேம்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? எனவே, யூடியூப்பில் அமர்ந்து கொண்டு வெற்றுக் கூச்சல் இடுவதையும் ஊள உதார் விடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீயும் உன் மனைவியும் எவரையும் புண்படுத்தாத மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள்! எப்படியும் உங்கள் மனைவி டைட்டில் வின்னர் ஆகிவிடுவார். அட்வான்ஸ் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X