ஒரு ரெட் கார்டு.. சம்பளமும் கிடையாது ஒன்னும் கிடையாது.. விஜே பாரு, கம்ருதீனை மொத்தமாய் முடித்துவிட்ட பிக்பாஸ்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே இரண்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் ரெட் கார்டு வாங்கிய சம்பவம் நேற்று அரங்கேறியது. சான்ட்ராவை பார்வதி எட்டி உதைக்க; அதற்கு கம்ரூதின் உதவி செய்ய அவர்களது சக போட்டியாளர்களும், பிக்பாஸ் ரசிகர்களும் மொத்தமாக அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டார்கள். இந்நிலையில் இரண்டு பேருக்கும் உச்சக்கட்ட பரிதாப நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே பெரும்பாலானோரின் எதிர்ப்பை சந்தித்தவர்களாக இருந்தார்கள் கம்ருதீனும், விஜே பார்வதியும். கம்ருதீன் ஒருபக்கம் அனைவரையும் இஷ்டத்துக்கு பேச; பார்வதியோ மறுபக்கம் இல்லாத தில்லாலங்கடி வேலைகள், வன்ம வேலைகள் எல்லாம் பார்த்தார். ஒருகட்டத்தில் இவர்கள் இரண்டு பேரும் கூட்டணி அமைத்தார்கள். அதற்கு More Than Friend Feel என்று ஒரு பெயரையும் வைத்துக்கொண்டார்கள்.

சான்ட்ராவை எட்டி உதைத்த பாரு: இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. காரில் கடைசிவரை இருப்பவர்கள் வென்றவர்கள் என்ற ரூல் இருந்தது. காருக்குள் பாரு பக்கத்தில் சான்ட்ரா அமர்ந்திருக்க; அவரை எட்டி உதைத்து கீழே தள்ளினார். பாருவின் இந்த அராஜக செயலுக்கு கம்ருதீனும் உடந்தையாக இருந்தார். இரண்டு பேரினால் கீழே விழுந்த சான்ட்ராவுக்கு Panic Attack வந்துவிட்டது. உடனடியாக சபரி உள்ளிட்டோர் முதலுதவி செய்தார்கள். அது சரிப்பட்டு வராததால் மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்த பழைய நிலைக்கு சான்ட்ராவின் உடல்நிலையை கொண்டு வந்தார்கள்.

Bigg Boss Tamil 9 Red-Carded VJ Parvathi and Kamrudin to Receive No Salary
Photo Credit:

மலை போல் எதிர்ப்புகள்: இரண்டு பேரின் அந்த அராஜக் செய்கையை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் கொதித்து போனார்கள். இவர்களின் அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லையா?.. உடனடியாக ரெட் கார்டு கொடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன. இனியும் அவர்களை வீட்டுக்குள் வைத்திருந்தால் நிகழ்ச்சிக்கே ஆபத்தாக முடியும் என்று முடிவெடுத்த நிகழ்ச்சி குழுவினரும், விஜய் சேதுபதியும் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்கள்.

மன்னிப்பு கேட்ட பாரு, கம்ருதீன்: தங்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை அடுத்து சான்ட்ராவிடன் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டார்கள். கம்ருதீனோ அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு கலங்கியபடி வீட்டிலிருந்து வெளியேறினார். பார்வதி அவ்வளவு ஃபீல் செய்ததாக தெரியவில்லை. இருவரும் மன்னிப்பு கேட்டபோதும் சான்ட்ரா பயத்தில் கத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய அவர்களுக்கு பரிதாப நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

என்ன நிலைமை?: அதாவது பிக்பாஸிலிருந்து வெளியேறுபவர்களுக்கு புகைப்பட நினைவு பரிசு வழங்கப்படும். அதுமட்டுமின்றி இறுதியாக ஒருமுறை மேடைக்கும் வரவேற்பார்கள். ஆனால் இது அவர்களுக்கு நடக்கவில்லை. அனைத்துக்கும் உச்சக்கட்டமாக இத்தனை நாட்கள் (90) இருந்ததற்கான சம்பளமும் வழங்கப்படாது என்று கூறப்பட்டிருக்கிறது. 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான ஒரு பலனையும் அனுபவிக்காமல் சென்றிருக்கிறார்கள் அவர்கள். மேலும், கம்ருதீனின் மோசமான நடவடிக்கையால் அவரை சில சீரியல்களிலிருந்தும் தூக்கிவிட்டார்கள் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X