கம்ருதீன் என் பக்கமே வரல.. மன்னிக்கவே மாட்டேன்.. சாண்ட்ரா கணவர் பிரஜின் அதிரடி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனின் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சாண்ட்ராவை எட்டி உதைத்ததால் விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த சம்பவம்தான் இந்த சீசனின் ஹைலைட்டாக இருந்தது. சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்களை சந்தித்தபோது இன்னும் கம்ருதீனை மன்னிக்கவே இல்லை சாண்ட்ராவின் கணவர் பிரஜின் கூறியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நடந்து முடிந்திருக்கிறது. இதில் திவ்யா கணேஷ் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபரி இரண்டாவது இடத்தையும், விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடத்தையும், அரோரா நான்காவது இடத்தையும் பிடித்தார்கள். கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்திருக்கும் புகழ் தங்களது கரியரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் அத்தனை போட்டியாளர்களும் இருக்கிறார்கள்.

விஜே பார்வதி, கம்ருதீன்: இந்த சீசனில் சென்சேஷனலாக இருந்தவர்கள் என்றால் அது விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். இரண்டு பேரில் ஒருவர்தான் டைட்டிலை அடிப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை எட்டி உதைத்ததால் அவர்கள் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள். அவர்களுக்கு ரெட் கார்டை கொடுத்ததை அத்தனை பேருமே கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil 9 Sandra s Husband Prajin Says He Will Never Forgive Kamruddin
Photo Credit:

விஜே பார்வதி சொன்னது: அந்த விஷயம் பற்றி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், "நான் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்த்தேன். ஒரு விளையாட்டி தள்ளிவிடுதல் என்பது எப்போதுமே நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதை பார்வதி செய்யும்போது மட்டும் எப்படி மாறுகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என பேசியிருந்தார்.

பார்வதியின் தாய்: அவரது தாயோ, "பிக் பாஸ் வீட்டில் கார் டாஸ்க்கின் போது நள்ளிரவு 2 மணி வரை ஷோ பார்த்தேன்; அவ நல்லா கேம் ஆடினா, தன்னை எதிர்த்து பேசினவங்களுக்கு எதிரா கேள்வி கேட்டா; வீட்டை விட்டு வெளியே வரும் போதும் கெத்தாதான் வந்தா; போராளித்தன்மனியுடன் வந்தா. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுடன்தான் அவ வந்தா. நான் கலங்கவில்லை. கை தட்டினேன் நான் அந்த கேமுக்குள் இருந்த கொள்கையைத்தான் பார்த்தேன்" என ஒருபடி மேலே சென்று பெருமிதம்படி பேசியிருந்தார்.

லிமிட்டோட இருந்திருக்க வேண்டும்: ரெட் கார்டு விவகாரம் பற்றி பேசியிருந்த கம்ருதீனோ, "ஒருத்தர் நம்மால் இந்த நிலைமைக்கு போய்விட்டாரே என்று மனதார நான் அவரது காலில் விழுந்தேன்.சத்தியமாக உணர்ந்துதான் நான் விழுந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடி ரெட் கார்டு கொடுத்துட்டாங்களே என ஒரு மனது சொன்னது. இன்னொரு மனதோ, யார் என்ன சொன்னால் என்ன உனக்கு தவறு என்று தெரிகிறது போய் காலில் விழு என சொன்னது. அது என்னுடைய மன நிம்மதிக்காக விழுந்தேன்" என்றிருந்தார்.

பிரஜின் பேட்டி: இந்நிலையில் சாண்ட்ராவும், அவரது கணவர் பிரஜினும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரஜின் நிகழ்ச்சியில், "கம்ருதீன் என்னை ஃபேஸ் செய்யவே இல்லை. அவர் என் பக்கமே வரவில்லை. அவர் மீது இப்போது கோபம் இல்லை. ஆனால் எப்போதும் மன்னிக்கவே மாட்டேன். உன் தங்கச்சியையோ, அக்காவையோ யாராவது இப்படி செய்திருந்தால் நீ வேட்டியை மடித்துக்கொண்டு சண்டைக்கு இறங்கிருப்பாய்தானே. உனக்கு வந்த ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" என்றார்.

More from Filmibeat

Read more about: vj parvathy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X