பிக்பாஸ் திவாகர் அலப்பறை.. அதிர்ச்சியான பின்னணி பாடகர் மனோ.. அவருக்கு இப்படி ஒரு நிலைமையா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் அலப்பறைகள் சொல்லும்படி இல்லை. பலரிடமும் தகுதி தராதரம் பற்றி பேசி விஜய் சேதுபதியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட் அவர்; நடிக்கிறேன் என்று சொல்லி இஷ்டத்துக்கு எதையோ செய்துவருகிறார். இந்நிலையில் வீட்டுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பின்னணி பாடகர் மனோவை அதிர்ச்சியாக்கியிருக்கிறார் திவாகர்.
வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்ட திவாகர் ரீல்ஸ்களை போட்டு ரசிகர்களிடையே மொத்து வாங்கிக்கொண்டிருந்தார். எத்தனை அட்டாக்குகள் வந்தாலும் அவர் கோமாளித்தனமாக செய்வதை துளியும் நிறுத்தவில்லை. இது போதாக்குறைக்கு சில தனியார் யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்ததன் மூலம் சோஷியல் மீடியாக்களில் பேசுபொருளாகவும் செய்தார்.
பிக்பாஸில் திவாகர்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனுக்கு செலக்ட் ஆனார் அவர். இந்த நிகழ்ச்சிக்கு வாட்டர் மெலன் ஸ்டார் வந்ததை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். அதுமட்டுமின்றி இந்த சீசனில் ஏகப்பட்ட சோஷியல் மீடியா பிரபலங்களைத்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு களமிறக்கியிருந்தது. அதனால் கன்டென்ட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பப்பட்டது.

வீட்டுக்குள் அலப்பறை: அதன்படி வந்த 20 போட்டியாளர்களும் ஆளுக்கு ஒருமாதிரி நடந்துகொள்கிறார்கள். அதிலும் வாட்டர் மெலன் ஸ்டாரை பற்றி சொல்லவே வேண்டாம். முதல் நாளிலிருந்து இப்போதுவரை அவர் போட்டியில் தாக்குப்படித்து நின்றாலும் சக போட்டியாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் அபத்தமாகவே இருக்கிறது. முதலில் விஜே பார்வதியை தங்கை என்று கூறினார்; பிறகு அவரிடமே மாற்றி நடந்தார். அதேபோல் யாரிடம் என்ன பேசினாலும் உங்களுக்கு என்ன தராதரம் இருக்கிறது என்றும் வாயை விட்டார்.
கண்டித்த விஜய் சேதுபதி: திவாகரை இந்த சீசனின் அறிமுக நிகழ்ச்சியிலிருந்தே திருத்துவதற்கு விஜய் சேதுபதி முயன்றுகொண்டே இருக்கிறார். அவரும் பள்ளி குழந்தை போல் தலையை ஆட்டிவிட்டு தனது போக்குக்கு நடந்துகொள்கிறார். சமீபத்தில்கூட அவர் தராதரம், தகுதி பற்றி பேசியதை சுட்டிக்காட்டி கண்டிக்க செய்தார் சேது. அதுமட்டுமின்றி ரீல்ஸ் செய்வதற்காக இங்கே நீங்கள் வரவில்லை என்பதையும் நினைவுப்படுத்தினார்.
ஷாக்கான மனோ: ஆனால் அவர் மாறியதாக இல்லை. இந்தச் சூழலில் பின்னணி பாடகர் மனோ சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அவரையும் விட்டுவைக்காத திவாகர், 'சார் நான் சிவாஜி மாதிரி நன்றாக நடிப்பேன்.. நீங்கள் வாசிங்க' என்று சொல்லிவிட்டு கர்ண கொடூரமாக கர்ணன் பட பாடலுக்கு நடித்துக்காண்பித்தார். நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த மனோவோ ஏதோ பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்தது மாதிரியும், ஷாக்காகியும் ஒரு ரியாக்ஷனை கொடுத்து; நன்றாக நடிக்கிறீர்கள் என்று ஃபார்மாலிட்டிக்கு சொல்லி அமைதியாக இருந்துகொண்டார். இந்த வீடியோ இப்போது அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











