Bigg Boss Tamil 9 - விஜே பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு.. பொடனிலேயே போட்டு அனுப்பிய விஜய் சேதுபதி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் காரிலிருந்து சான்ட்ராவை எட்டி உதைத்த பார்வதியும், அதற்கு உதவி செய்து சப்போர்ட் செய்த கம்ருதீனும் கடும் கண்டனங்களை சம்பாதித்துவருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் இதுவரை 15 பேர் எவிக்ட் ஆகிவிட்டார்கள். மற்ற 9 பேர் வீட்டுக்குள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இறுதிச்சுற்றுக்கு செல்லும் Ticket To Finale டாஸ்க் நடந்தது. அதில் வென்று அரோரோ முதல் ஃபைனலிஸ்டாக மாறியிருக்கிறார். அந்த டாஸ்க்கின்போது காரிலிருந்த சான்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்ததில்; அவர் கீழே விழுந்தார். மேலும் அவருக்கு வலிப்பும் ஏற்பட்டது. பார்வதி சான்ட்ராவை எட்டி உதைத்தபோது கம்ருதீனும் உதவி செய்தார்.
உடல்நலம் தேறிய சான்ட்ரா: காரிலிருந்து சான்ட்ரா கீழே விழுந்ததும் விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கானா வினோத் ஆகியோர் தங்களால் முடிந்த முதலுதவியை செய்தார்கள். இருந்தாலும் அவருக்கு சரியாகவில்லை. உடனடியாக வீட்டுக்குள் வந்த மருத்துவ குழு சான்ட்ராவுக்கு தேவையான சிகிச்சையை அளித்தது. இதன் காரணமாக அவர் மீண்டும் உடல்நலம் தேறியிருக்கிறார். டாஸ்க்கில் இருந்தாலும் மற்றவருக்கு ஒரு பிரச்னை என்றது ஓடி வந்து உதவி செய்த மூன்று பேருக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

விளாசிய திவ்யா கணேஷ்: இது ஒருபக்கம் இருக்க திவ்யா கணேஷ்; பார்வதியை விட்டு கிழித்துவிட்டார். நீ ஒரு ஓன கிழவி என்றும்; உன் மூஞ்சிய பார்த்தாலே வாந்தி வர மாதிரி இருக்கிறது; ஏற்கனவே உன் மூஞ்சி வாந்தி எடுத்த மாதிரிதான் இருக்கிறது. இப்படியெல்லாம் செய்வதற்கு எப்படி உனக்கு மனசாட்சி வருகிறது; உன் அம்மா வந்து கிளாஸ் எடுத்தே திருந்தாத நீ நாங்கள் சொல்லியா திருந்தப்போகிறாய் என சகட்டுமேனிக்கு விளாசினார். இதன் காரணமாக திவ்யாவையும் ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள்.
ரசிகர்கள் வைத்த கோரிக்கை: அதேபோல் ரசிகர்களும் அந்த இரண்டு பேரையும் சும்மா விடவில்லை. இன்று காலை முதல் சோஷியல் மீடியாக்கள் முழுவதும் அந்த டாக்சிக் நபர்களை பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. ஒன்றுமே செய்யாத பிரதீப் ஆண்டனிக்கெல்லாம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள். இவர்களையும் அப்படித்தான் அனுப்ப வேண்டும்; அசீமைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் கூறினார்கள்.
ரெட் கார்டு பெற்ற பாரு, கம்ருதீன்: இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் சேதுபதி பார்வதியிடமும், கம்ருதீனிடமும், 'கம்ருதீனிடம் நான் எவ்வளவோ முறை சொல்லிவிட்டேன். இப்படி பேசுகிறீர்களே அதை பார்ப்பவர்களுக்கு ஹார்டாக இருக்காதா?.. உங்கள் அக்கா இதை பார்த்தால் நீ நல்லா பண்ண தம்பி என்று சொல்வார்களா. பாரு வீட்டுக்கு போனால் பாராட்டு விழாதான் எடுப்பார்கள். ஒரு பெண்ணை எட்டி உதைத்ததை நான் ரசித்தேன் என அவர் அம்மா சொல்வார். ரொம்ப சந்தோஷம். நீங்கள் இரண்டு பேரும் வீட்டுக்கு செல்லுங்கள்' என சொல்லி ரெட் கார்டு வழங்கினார். இது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் மக்கள் மனதை விஜய் சேதுபதி புரிந்துகொண்டுவிட்டார் என்று அவருக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.


Click it and Unblock the Notifications











