நானும், கம்ருதீனும் காஜி கப்பிளா?.. திவ்யா கணேஷை வம்பிழுக்கும் விஜே பார்வதி.. பிரச்னை இன்னும் முடியல

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் திவ்யா பாரதி டைட்டிலை தட்டி சென்றார். ஆனால் டைட்டிலை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள். இந்த சீசனின் பெரும் பரபரப்பாக அமைந்தது அந்த விஷயம். இந்நிலையில் பிக்பாஸ் முடிந்திருக்கும் சூழலில் விஜே பார்வதியும், கம்ருதீனும் சேர்ந்து கலந்துரையாடல் செய்தார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த வருடம் ஆரம்பித்தது. 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் அதிக சென்சேஷன் ஆனது என்றால் கம்ருதீனும், விஜே பார்வதியும்தான். இரண்டு பேரும் ஆரம்பத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். ஆனால் கேம் செல்ல செல்ல அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமானார்கள். ஒருகட்டத்தில் More than friendship என்ற ரிலேஷன்ஷிப்புக்குள் சென்றார்கள்.

முகள் சுளித்த ரசிகர்கள்: அவர்கள் அந்த ரிலேஷன்ஷிப்புக்குள் சென்ற பிறகு இரண்டு பேரின் அலப்பறைகளை தாங்கவும் முடியவில்லை; அவர்கள் பேசியதை கண் வைத்து பார்க்கவும் முடியவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள், தனியறைக்கு சென்றது என எல்லை மீறி நடந்துகொண்டார்கள். அதை பார்த்து ரசிகர்கள் அனைவருமே முகம் சுளித்தார்கள். இதுவரை இல்லாத அளவு அவர்களது ரிலேஷன்ஷிப் முகம் சுளிக்கும்படி இருந்ததாக ஓபனாகவே அடிக்கவும் செய்தார்கள் ரசிகர்கள்.

Bigg Boss Tamil 9 VJ Parvathy and Kamrudeen Share Their Side of the Story
Photo Credit:

கணிக்கப்பட்டவர்கள்: அதேசமயம் இவர்களில் ஒருவர்தான் டைட்டிலை வெல்வார்கள் என கணிக்கவும்பட்டிருந்தது. ஆனால் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சான்ட்ராவை எட்டி உதைத்தார் பார்வதி. அவருக்கு கம்ருதீன் உதவி செய்தார். இதனால் பெரும் அதிர்ச்சி உண்டானது. அந்த சம்பவத்துக்கு பிறகு இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றியது நிகழ்ச்சி குழு. அந்த அதிரடி நடவடிக்கைக்கு போட்டியாளர்கள், ரசிகர்களிடையே பெரிய ஆதரவு கிடைத்தது.

இரண்டு பேர் செய்த கலந்துரையாடல்: அவர்கள் வெளியேறியதை தொடர்ந்து திவ்யா கணேஷ் டைட்டிலை வென்றார். சபரி இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் முடிந்ததை அடுத்தும் கம்ருதீனும், விஜே பார்வதியும் டச்சில்தான் இருக்கிறார்கள். அதேசமயம் பாருவுடனான பழக்கத்தை கட் செய்துவிடு என சக போட்டியாளர்கள் கம்ருதீனுக்கு அட்வைஸ் செய்யவும் தவறவில்லை. ஆனால் அதை கம்ருதீன் உதாசீனப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் விஜே பார்வதியும், கம்ருதீனும் கலந்துரையாடல் செய்தார்கள்.

விஜே பார்வதி பேசியது: அந்த கலந்துரையாடலில் பேசிய விஜே பார்வதி, "நாம் காஜி கப்பிள் என்று சொன்னதை கேட்டு வெளியே வந்ததும் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என்னை போலி பெண்ணியவாதி என சொல்கிறார்கள். ஆனால் நான் ஆர்த்தாடக்ஸ் குடும்பத்திலிருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் நான்தான் அதைப் பற்றி பேச வேண்டும். நாம் மோதலில்தான் ஆரம்பித்தோம். சமீபத்தில்கூட நீங்கள் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது டைட்டில் வின்னர் (திவ்யா கணேஷ்) என்ன கம்மு கர்சீஃப்பை எடுத்துக்கொடுக்கிற வெளியே உங்களை திட்டமாட்டாங்களானு கேட்கிறாங்க. எதுக்கு இதெல்லாம். நான் உங்கள் வம்புக்கே வரது இல்லையே" என்று கூறினார்.

கம்ருதீன் சொன்னது: அதே கலந்துரையாடலில் பேசிய கம்ருதீனோ, 'காதலுக்கும், காமத்துக்கும் ஒரு கோடுதான் இருக்கிறது. நான் கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் தெய்வீக காதலில்தான் இருந்தேன். அதேபோல் வெளியே போன பிறகு இவரோடு (பார்வதி) டச்ல இருக்காதனு சொன்னவங்களோடுதான் நான் டச்சில் இருக்கமாட்டேன்' என்றார். இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் முடிந்தாலும் இவங்களோட பிரச்னை முடியமாட்டேங்குதே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X