பிக்பாஸ் ரெட் கார்டு விஜே பார்வதி இன்னும் திருந்தல.. அவங்க அம்மாவும் அப்படித்தான் இருக்காங்க
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் சக போட்டியாளரான சாண்ட்ராவை எட்டி உதைத்ததன் காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த விவகாரம் அண்மையில் சோஷியல் மீடியாவில் பெரிய சென்சேஷனல் ஆனது. சூழல் இப்படி இருந்த பிக்பாஸ் முடிந்த பிறகு தனியார் யூடியூப் சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் விஜே பார்வதியும், அவரது தாயும் கலந்துகொண்டார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதி போட்டியாளராக கலந்துகொண்டார். யூடியூபில் நிறைய வீடியோக்களை போட்டும், சில தனியார் யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாகவும் இருந்த அவர் இந்த சீசனின் ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். நாட்கள் செல்ல செல்ல அவர் முழு மூச்சாக கேமுக்குள் வந்து விளையாட செய்தார். தனது மனதில் பட்டதை நேரடியாக பேசி சில சர்ச்சைகளையும் சந்தித்தார்.
கம்ருதீனுடன் நெருக்கம்: ஆரம்பத்தில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அண்ணன், அண்ணன் என அழைத்து அவருடன் நெருக்கமாக பழகினார். அதனைத் தொடர்ந்து கம்ருதீனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். இரண்டு பேரும் தங்களுக்குள் இருந்த உறவினை More Than Friendship என்று சொல்லிக்கொண்டார்கள். தனி அறைக்கு செல்வது, மைக்கை மறைத்துக்கொண்டும், டபுள் மீனிங்கிலும் பேசுவது என அவர்களது அலப்பறை பிக்பாஸ் வீட்டுக்குள் கொஞ்சம் ஓவர் டோஸாகவே சென்றது.

இரண்டு பேருக்குமே ரெட் கார்டு: ஆனாலும் அவர்கள் இரண்டு பேரில் ஒருவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவார்கள் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. 90 நாட்கள் வரை மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டி கொடுத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சக போட்டியாளர் சாண்ட்ராவை விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் எட்டி உதைத்தார்கள். இதனால் இரண்டு பேருக்குமே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள்.
விஜே பார்வதி பேட்டி: அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு பலரும் தங்களது ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்தார்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜே பார்வதியும், அவரது தாயும் சேர்ந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்கள். அந்தப் பேட்டியில் பேசிய பார்வதி, "நான் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்த்தேன். ஒரு விளையாட்டி தள்ளிவிடுதல் என்பது எப்போதுமே நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதை பார்வதி செய்யும்போது மட்டும் எப்படி மாறுகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என்றார்.
தாய் சொன்னது: அவரைத் தொடர்ந்து பேசிய பாருவின் தாய், "பிக் பாஸ் வீட்டில் கார் டாஸ்க்கின் போது நள்ளிரவு 2 மணி வரை ஷோ பார்த்தேன்; அவ நல்லா கேம் ஆடினா, தன்னை எதிர்த்து பேசினவங்களுக்கு எதிரா கேள்வி கேட்டா; வீட்டை விட்டு வெளியே வரும் போதும் கெத்தாதான் வந்தா; போராளித்தன்மனியுடன் வந்தா. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுடன்தான் அவ வந்தா. நான் கலங்கவில்லை. கை தட்டினேன் நான் அந்த கேமுக்குள் இருந்த கொள்கையைத்தான் பார்த்தேன்" என கூறினார்.


Click it and Unblock the Notifications











