3 திருமணங்கள் நடந்தது உண்மையா?.. குழந்தைகள் ஒரே அழுகை.. மனம் திறந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்

சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட 40 நாட்கள்வரை விளையாடிவிட்டு எவிக்ட் ஆனார். வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு பேட்டிகள் கொடுப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கும் அவர் மூன்று திருமணங்கள் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் திவாகர்.

வாட்டர் மெலன் ஸ்டார், நடிப்பு அரக்கன் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் திவாகர் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டார். ஒருவாரம்கூட தாக்குப்பிடிக்கமாட்டார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அவரோ 40 நாட்கள்வரை விளையாடிவிட்டு எவிக்ட் ஆனார். வீட்டை வெளியே வந்த அவர் வழக்கம்போல் பேட்டிகள் கொடுப்பது, ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்.

மூன்று திருமணங்களா?: இது ஒருபக்கம் இருக்க அவருக்கு திருமணமாகிவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு புகைப்படத்துடன் ஒரு தகவல் பரவியது. அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு திருமணம் நடக்கவில்லை மூன்று திருமணங்கள் நடந்ததாகவும் சோஷியல் மீடியாவில் பேச்சுக்கள் ஓடின. இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்த அவர்; இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அதற்கான விளக்கத்தை அளித்தார்.

Bigg Boss Tamil 9 Water melon star Diwakar Clarifies About Three Marriages controversy
Photo Credit:

திவாகர் பேச்சு: மதுரையில் திவ்யா என்ற படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர், "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான தகவல்களை சில யூடியூபர்கள் பரப்புகிறார்கள். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். மூன்று பெண்அளை எல்லாம் நான் திருமணம் செய்யவில்லை. இதற்கு மேல் என்னை பற்றி தவறான மற்றும் பொய்யான தகவல் வந்தால் அதை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.எனவே எனக்கு கெட்ட பெயரை பெற்றுத்தர இப்படி சிலர் செய்கிறார்கள்.

சாப்பாட்டுக்கு தட்டுப்பாடு இருக்கு: பிக்பாஸ் வீட்டுக்குள் சாப்பாட்டுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. அவர்கள் சொல்லும் டாஸ்க்கை நாங்கள் செய்துகொண்டே இருப்போம். ஸ்கூலில் படிக்கும்போதுகூட ஃப்ரீயாக இருக்கலாம். அங்கு அப்படி இல்லை. பிக்பாஸ் வீட்டில் நான் வீட்டு வேலைகளை கற்றுக்கொண்டேன். சுடுதண்ணீர்கூட வைக்க தெரியாத நான் பாத்திரம் கழுவுவதிலிருந்து கழிவறை கழுவுவதுவரை கற்றுக்கொண்டேன்.

அதையும் தெரிந்துகொண்டேன்: அதுமட்டுமின்றி வெவ்வேறு குணமுடைய 20 பேர் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் அங்கு புரிந்துகொண்டேன். பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் குழந்தைகள் அழுதார்கள். நடிப்பு அரக்கன் என்ற சொல் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை வைரல் ஆகிவிட்டது. யார் பிக்பாஸ் வின்னர் ஆவார் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. வைல்டு கார்டு என்ட்ரி நடந்தால் இன்னும் கேம் மாறலாம்" என்றார்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X