தர்பூசணியை வைத்து தெருவுல.. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை பிளந்த ஜிபி முத்து.. என்னா பேச்சு பேசுறாரு?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனிலிருந்து வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அதிரடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவரது எவிக்ஷன் பலரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் வீட்டை விட்டு சென்றபோது அழுத விஜே பார்வதியையும் ரசிகர்கள் கிண்டல் செய்துவருகிறார்கள். இந்நிலையில் திவாகரை ஜிபி முத்து கடுமையாக தாக்கி பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் ஒருவர். அவர் சும்மாவே இஷ்டத்துக்கு பேசுவார், நடந்துகொள்வார். அவரை கொண்டுபோய் பிக்பாஸ் வீட்டில் விட்டிருக்கிறார்களே என்று பலரும் நெகட்டிவ்வாகவே பேசினார்கள். அதெல்லாம் இல்லை பிக்பாஸை புரிந்துகொண்டு கண்டிப்பாக அதற்கு தகுந்தபடி நடந்துகொள்வார் என்று ஒருதரப்பினர் சப்போர்ட்டும் செய்தார்கள்.
எந்த மாற்றமும் இல்லை: எப்படியும் வீட்டுக்குள் சென்றால் மாறிவிடுவார் என்று எதிர்பார்த்தால்; அவருக்குள் எந்த மாற்றமும் இல்லை. தான் ஒரு நடிப்பு அரக்கன் என்று தனது சக போட்டியாளர்களிடம் சொல்லி அவர்களை வெறுப்பேற்றினார்; வீட்டுக்குள் இருக்கும் கேமராக்கள் முன்பு நின்றுகொண்டு நடிக்கிறேன் என சொல்லி எதையோ செய்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதியை வெறுப்பேற்றினார். இப்படி வெறுப்பேற்றுவதையே முழு நேர வேலையாக வைத்திருந்தார்.

தராதரம் பற்றியும்: இதெல்லாம் தாண்டி வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் தன்னிடம் எது பேச வந்தாலும் உடனே உங்களது தகுதி என்ன தராதரம் என்னவென்று இஷ்டத்துக்கு பேசினார். அதை அவர்களும் கண்டித்தார்கள். விஜய் சேதுபதியும் கண்டித்தார். பற்றாக்குறைக்கு விஜே பார்வதியுடன் சேர்ந்தும் இல்லாத கூத்தெல்லாம் அடித்தார். நிலைமை இப்படி இருக்க அவர் விரைவில் எவிக்ட் செய்யப்பட வேண்டும் என்பதுதான் ரசிகர்கள் அத்தனை பேரின் கருத்தாக இருந்தது.
எவிக்ட் செய்யப்பட்ட திவாகர்: இனியும் திவாகரை விட்டால் செட் ஆகாது என்று நிகழ்ச்சி குழு எண்ணிவிட்டதுபோல. எனவே நேற்று அவர் அதிரடியாக எவிக்ட் செய்யப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்புகூட அவர் தனது நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதுமட்டுமின்றி விஜே பார்வதி திவாகருக்காக அழுததை பார்த்து இதென்னடா பாசமலர் படமே தோற்றுவிடும்போல என பங்கமாக கலாய்த்து பதிவிட்டுவருகின்றனர்.
ஜிபி முத்து வீடியோ: இந்நிலையில் யூடியூப் பிரபலமும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தர்பூசணி உன்னை எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி இரண்டாக பிளந்துவிட்டாரா? வசமாக மாட்டினியா?. ஆடிய ஆட்டம் என்ன?.. பேசிய பேச்சு என்ன?.. அட முட்டாப்பயலே இப்போ தெரியுதா மக்கள் ஒன்றும் சும்மா கிடையாது. நீ செய்யும் அனைத்தும் வெளியே வரும். நாம்தான் நடிக்கிறோம் என்று நினைக்கிறாய். உன் நடிப்பு எல்லாம் பிசுங்கி, குசுங்கி போச்சா. இப்போ தர்பூசணியை இரண்டாக வெட்டி ரோட்டில் வியாபாரம் செய்" என்றார்.


Click it and Unblock the Notifications











