பிக்பாஸிலிருந்து வந்த கானா வினோத்.. மொத்தமாய் சிதைச்சுவிட்ட ப்ளூ சட்டை மாறன்.. இப்படி அடிக்கிறாரே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடியும் சூழலில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் 18 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்து வெளியே வந்துவிட்டார். அவரது இந்த முடிவு பலரையும் ஷாக்காக்கியிருக்கிறது. போட்டியில் இருந்திருந்தால் இவரே டைட்டிலை வென்றிருப்பார்; இவர் ஏன் அவசரப்பட்டார் என்ற கருத்தைத்தான் பார்க்க முடிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் வேறு எந்த சீசன்களைவிடவும் பரபரப்பானது. ஆரம்பத்தில் இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் கன்டெண்ட் எல்லாம் கொடுக்கமாட்டார்கள் என்றுதான் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் விஜே பார்வதி, கம்ருதீன் என பலரும் அதற்கு நேர் மாறாக செயல்பட்டார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி எதிர்பார்க்காத வகையில் சென்றது. இந்த சீசனின் போட்டியாளர்களிலேயே பாருவும், கம்ருதீனும்தான் ஹைலைட்டானார்கள்.
என்ன செய்தார்கள்?: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது காரில் தனக்கு அருகே அமர்ந்திருந்த சாண்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்தார். அவருக்கு கம்ருதீனும் உதவி செய்து ஆதரவளித்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த; உடனடியாக அவர்கள் இரண்டு பேருக்கும் ரெட் கார்டு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. விஜய் சேதுபதியும், பிக்பாஸும் அதிரடியாக விஜே பாருவுக்கும் கம்ருதீனுக்கும் ரெட் கார்டினை வழங்கினார்கள்.

கணிக்கப்பட்டவர்கள்: அவர்கள் இரண்டு பேரில் ஒருவர்தான் டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இரண்டு பேருமே வெளியே சென்றதை அடுத்து கானா வினோத் அல்லது அரோரா வெல்வதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கணித்திருந்தார்கள். இன்னும் சில நாட்களில் இந்த சீசன் நிறைவடையவிருக்கிறது. எனவே யார் வெற்றியாளர் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
பண பெட்டி எடுத்த கானா வினோத்: ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கேற்ப பண பெட்டி வைக்கப்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கானா வினோத் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்தப் பெட்டியில் மொத்தம் 18 லட்சம் ரூபாய் இருந்தது. டைட்டில் வெல்வார் என்று நம்பப்பட்ட ஒருவர் பண பெட்டியை எடுத்த விஷயம் பலருக்கும் ஷாக்கை கொடுத்தது. அரோராதான் வினோத்தின் மண்டையை கழுவி பெட்டியை எடுக்க வைத்துவிட்டார் என விமர்சனங்களும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழலை மனதில் வைத்துதான் 18 லட்சம் ரூபாயை எடுத்தார் வினோத் என கருதப்படுகிறது. வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு உற்சாகமான வரவேற்பினை அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் வழங்கினார்கள். அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், 'ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தங்கமகன்.. நாடு திரும்பிய காட்சி. மக்கள் ஆரவார வரவேற்பு' என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











